இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்திருப்பதாவது:
இன்றைய காலக்கட்டத்தில் மனிதன் பல்வேறு வகையான நோய்களுக்கு திடீர் ஆட்பட்டு, அவதிப்பட்டு வருவது நாம் அறிந்ததே. விலைவாசி உயர்வால், அன்றாட செலவுகளை சமாளிக்க மக்கள் திணறி வரும் நிலையில், மருத்துவ செலவுகளை ஏழைய எளிய மக்கள் ஏற்பது என்பது இயலாத ஒரு காரியமாக உள்ளது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களால் கூட்டுறவுத்துறை மூலம் அம்மா மருந்தகம் கூட்டுறவு நிறுவனங்களால் ஏற்று நடத்தப்பட்டு நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
மாவட்டத்தில் நான்கு அம்மா மருந்தகங்கள் உள்ளன. தஞ்சாவூரில் 08.11.2014 முதலும், கும்பகோணத்தில் 07.12.2014 முதலும் மூன்று அம்மா மருந்தகங்களும் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த நான்கு அம்மா மருந்தகங்களும் அவற்றை நிர்வகிக்க சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களுக்கு வட்டியில்லாத நடைமுறை மூலதனமாக தலா ரூ.10 இலட்சம் வீதம் விலை கட்டுப்படுத்தும் நிதியுதவி அரசால் வழங்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் நான்கு அம்மா மருந்தகங்களும் துவங்கப்பட்ட நாளிலிருந்து, மே 2015 திங்கள் வரை ரூ.58.35 இலட்சம் மதிப்பீட்டில் குறைந்த விலையில் மக்களுக்கு ரூ.12 சதவிகித தள்ளுபடியில் மருந்து பொருட்கள் விற்பனை செய்து சிறந்த முறையில் செயல்பட்டு வருகின்றன.
மக்களுக்கு அனைத்துவிதமான தரமான மருந்துகளும் கிடைக்கும் வகையிலும், மேலும் ஆர்டரின் பேரில் மருந்துகள் தேவைப்படுவோரின் வீடுகளுக்கு நேரில் கொண்டு சென்று விற்பனை செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அம்மா மருந்தகங்கள் பொது மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது என்றால் அது மிகையாகாது.
ஏழை, எளியவர்களை பாதிப்பு எப்போதுமே விலைவாசி உயர்வு தான். தற்போது பொருளாதார சுழ்நிலை மாற்றங்கள் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை ஏறிக்கொண்டே செல்கிறது. மேல்தட்டு மக்கள் தவிர மற்ற மக்களை இது பாதிப்பதாக அமைந்துள்ளது. பொருளாதார சுழ்நிலைகளால் தனியாரால் ஏற்படும் இது போன்ற சோதனை, வேதனைக்குள், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் சிக்கிக் கொள்ளாத வகையில் அவர்களைக் காப்பாற்றுவது தான் ஒரு அரசின் முக்கிய கடமையாகும்.
தனியாரின் நவீன மருந்தகங்களில் உள்ள அனைத்து வசதிகளும் அம்மா மருந்தகங்களில் உள்ளன. தனியார் மருந்து கடைகளைப் போலவே இவை பராமரிப்பில் சிறந்து விளங்குகின்றன. அனைத்து அம்மா மருந்தகங்களிலும் பெரிய குளிர் சாதனப் பெட்டிகள் நிறுவப்பட்டுள்ளன. மருந்துகள் கெட்டு போகாமல் பாதுகாக்கப்படுவதற்கான அனைத்து உள்கட்டமைப்பு ஏற்பாடுகளும் அம்மா மருந்தகங்களில் செய்யப்பட்டு இருப்பதால் மக்களின் நம்பிக்கையில் அவை இடம் பெற்றுவிட்டன. மக்களை அரசு காத்து மக்கள் நலன் ஒன்றை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது என்பதை எடுத்துக்காட்டும் திட்டம்
எனவே கூட்டுறவுத்துறை அம்மா மருந்தகத்தின் மூலம் தள்ளுபடி விலையில் மருந்துகளை பெற்று பயன் அடைய கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

உட் கட்டமைப்பு, வேலை வாய்ப்பு அதிகரித்தல், சட்டம் ஒழுங்கு பராமரித்தல், மின்சார தேவை பூர்த்தி செய்தல் இது தான் அரசின் வேலையாக இருக்கும் விளம்பரத்துக்காக எல்லா வியாபாரத்திலும் கால் பதிக்க வேண்டும் ஆனால் ஆட்சி மாறினால் இதெல்லாம் மூடுவிழா நடத்தப் படும், விலை சலுகையில் மருந்துகளை பெற்ற மக்கள் ஏமாற்றம் அடைவார்கள் என்பது ஆட்சியாளருக்கு தெரியாதா?மருந்துக்கடை திறப்பதால் தமிழ்நாடே நோயில்லா மாநிலமாகமாரிவிடுமோ?
ReplyDelete