.

Pages

Sunday, June 14, 2015

பட்டுக்கோட்டை - அதிரை பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த 2 பேர் கைது !

பட்டுக்கோட்டை அதிரை ரோடு மாளியக்காடு பகுதியை சேர்ந்தவர் சுப்பையன் (வயது 60). இவர் அறந்தாங்கி ரோட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து வருவதாக பட்டுக்கோட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை செய்தனர். அப்போது அங்கு சுப்பையன் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை வைத்து விற்பனை செய்து வந்ததை கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் அதிரை செல்லியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (40). இவர் அதிரை பழஞ்செட்டி நகரில் சட்டவிரோதமாக லாட்டரி சீட்டுகளை மறைத்துவைத்து விற்பனை செய்துவந்ததை அதிரை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.