.

Pages

Sunday, June 14, 2015

பட்டுக்கோட்டையில் மருத்துவர்களுக்கான இருதய பரிசோதனை முகாம் !

பட்டுக்கோட்டை கிளை இந்திய மருத்துவர் சங்கம் மற்றும் திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனை இணைந்து மருத்துவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான சிறப்பு இருதய மருத்துவ பரிசோதனை முகாமினை நடத்தின.
     
பட்டுக்கோட்டை கிளை இந்திய மருத்துவர் சங்க ஏற்பாட்டில் பட்டுக்கோட்டை சதாசிவம் மருத்துவமனையில் நடைபெற்ற முகாமிற்கு கிளை தலைவர் டாக்டர் ரத்னா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். செயலாளர் டாக்டர் கிளாடியஸ் காமராஜ் முன்னிலை வகித்தார். முகாமில் திருச்சி காவேரி ஹார்ட் சிட்டி மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் தமிழரசன் தலைமையிலான குழு மருத்துவர்களை பரிசோதனை செய்து ஆலோசனை வழங்கினர்.
           
முகாமில் டாக்டர் சதாசிவம், மாவட்ட சுகாதார திட்ட அலுவலர் டாக்டர் எம்.எட்வின், சுகாதார துறை முன்னாள் இணை இயக்குனர் டாக்டர் மகாலிங்கம் மற்றும் பட்டுக்கோட்டை, பேராவூரணி, அதிரை, முத்துப்பேட்டை மதுக்கூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த இந்திய மருத்துவர் சங்க உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டு இருதய பரிசோதனை செய்து கொண்டனர்.
               
இதுகுறித்து மருத்துவர் எம்.எட்வின் கூறுகையில்,
"இன்றைய காலகட்டத்தில் மருத்துவர்கள் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல், மருத்துவ பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்கள் குடும்பத்தினரை கவனிப்பதற்கு கூட நேரம் ஒதுக்காமல், தங்கள் உடல்நலனை கவனிக்காமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்திய மருத்துவர் சங்க பட்டுக்கோட்டை கிளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம் மருத்துவ முகாம் வரவேற்கத்தக்க ஒன்றாகும்" என குறிப்பிட்டார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.