.

Pages

Thursday, June 11, 2015

பட்டுக்கோட்டை தாசில்தாரை மிரட்டிய 2 பேர் கைது !

பட்டுக்கோட்டை தாசில்தாரராக இருப்பவர் பி.சேதுராமன். சம்பவத்தன்று பட்டுக்கோட்டை தாசில்தார் சேதுராமன் அலுவலகத்தில் இருக்கும்போது அவரை 2 பேர் விலை உயர்ந்த அரசு முத்திரையுடன் கூடிய நம்பர் பிளேட் பொருத்திய காரில் வந்து சந்தித்தனர். அவர்களில் ஒருவர் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். மற்றொருவர் அவருடைய கார் டிரைவர் என்று சொல்லிக் கொண்டார்.

பின்னர் 2 பேரும் சில போலி ஆவணங்களைக் கொடுத்து பட்டா மாறுதல் மற்றும் சான்றுகள் தரும்படியும், இல்லையெனில் லஞ்ச வழக்கில் சிக்க வைத்து விடுவோம் என்றும் கூறி மிரட்டி சென்று விட்டனர்.

இதனால் பட்டுக்கோட்டை தாசில்தார் சேதுராமனுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து பட்டுக்கோட்டை தாலுகா போலீசில் தாசில்தார் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் மேகநாதன் (தனிப்பிரிவு) ராஜேந்திரன் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரணை நடத்தி பட்டுக்கோட்டையில் பதுங்கியிருந்த 2 பேரை பிடித்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் சென்னை மண்ணிவாக்கம் சண்முகாநகரைச் சேர்ந்த செல்லக்கண்ணு மகன் அருணாசலம் (வயது 40), சென்னை மணப்பாக்கம் பொன்னியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த தேவராஜ் மகன் குமார்(32) என்பதும், இவர்கள் தான் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் என்று கூறி தாசில்தார் சேதுராமனை மிரட்டியவர்கள் என்பதும் தெரிய வந்தது.

மேலும் அவர்கள் 2 பேரும் கடந்த 1 ஆண்டாக அரசு ஊழியர்களை மிரட்டி மோசடி செய்து வந்ததும் தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அருணாசலம், குமார் ஆகிய 2 பேரையும் கைது செய்து, அவர்களிடம் இருந்து விலை உயர்ந்த சொகுசு காரையும், 2 செல்போன்களையும் போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.