வாரத்தின் முதல் 5 நாட்களில் காலை 11 மணிக்கு தொடங்கும் தொலைக்காட்சி தொடர்கள் பிற்பகல் 3.30 மணி வரை தொடர்கிறது. அதற்கடுத்து திரைப்படம். பின்னர் மீண்டும் மாலை 6 மணியளவில் தொடங்கும் தொடர்கள் இரவு 11 மணி வரை சிந்துபாத் கதையை போல் நீள்கின்றன. இதனால் பெரும்பாலான மக்கள் தொடர்களுக்கு அடிமையாகி சோம்பேறிகளாகி விடுகின்றனர். வீட்டிலிருக்கும் பெண்கள் சாதனை படைக்கும் விதத்தில் தனி நபர் சார்ந்த சுயதொழில்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தினால் நாட்டுக்கும் நல்லது. மக்களின் குடும்பத்திற்கும் நல்லது. ஆனால் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்தாமல், தொடர்கள் என்ற பெயரில் தொலைக்காட்சி நிறுவங்கள் மக்களை சோம்பேறிகளாக்குகின்றன.
அதே போல் குழந்தைகள் கல்வி பயிலும் மாலை நேரங்களில், அவர்களுக்கு கொடுக்கப்படும் வீட்டுப்பாடங்களை சொல்லித்தர வேண்டிய குடும்பத்தினர், குழந்தைகளின் கல்விக்கு முக்கியத்துவம் தருவதை விடுத்து, தொலைக்காட்சி தொடர்களை பார்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இதனால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலம் தான் பாதிக்கப்படும் என்பது கூட அவர்களுக்கு புரிவதில்லை.
மாலை வேளைகளில் இது போன்ற தொடர்களை ஒளிபரப்புவதற்கு பதிலாக கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குழந்தைகளுக்கு மிகுந்த பயன் அளிப்பதாக இருக்கும். இந்நூற்றாண்டில் சிறப்பான தொழில் நுட்பங்களை பயன்படுத்தி குழந்தை செல்வங்களை மிகப்பெரும் திறமைசாலிகளாக மாற்றுவதற்கான வாய்ப்புகள் இருந்தும், அவற்றையெல்லாம் பயன்படுத்தாமல் அரசும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது மிகுந்த கவலையை தருகிறது.
இதற்கு ஒரே வழி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சினிமா மற்றும் தொடர்களுக்கு தடை போடுவது தான். இதற்கு பதிலாக சுய தொழில் வாய்ப்புகள், வேலை வாய்ப்பு செய்திகள், கல்வி தொடர்பான நிகழ்ச்சிகள், விழிப்புணர்ச்சி நிகழ்ச்சிகள், இயற்கை விவசாயம், விவசாய சந்தை வாய்ப்புகள், சுயதொழில் தொடர்பான சந்தை வாய்ப்புகள் ஆகியவற்றை ஒளிபரப்ப மத்திய அரசு முயற்சிக்க வேண்டும்.
நன்றி: மாலை மலர்

மிக நல்ல பதிவு, இன்றைக்கு நமக்கு மிகவும் வேண்டிய செய்திகள் அடங்கியுள்ளது.. எந்த அளவிற்கு நம் மக்கள் அடிமையாய் இருக்கிறார்கள் என்பதை கட்டுரையை விட படம் மிகவும் தெளிவாக விளங்கவைக்கிறது. காலளவு வெள்ளம் வீட்டிற்குள் வந்தாலும், எத்துனை கவனம் தொலைகாட்சி நிகழ்ச்சிகளிலே !!! பாவம் இந்த தேசம்,
ReplyDeleteஇதற்கெல்லாம் அரசு ஒன்றும் செய்யமுடியாது. நாம் தான் நம்மை பார்த்துக்கொள்ள வேண்டும். அரசு முடிந்தாலும் ஒன்றும் செய்யாது காரணம், மக்கள் விழித்து யோசிக்க ஆரம்பித்தால். நம்மை ஆள்பவர்களும், ஆண்ட வர்களும் இனி ஒருபோதும், அரசுக்கட்டிலில் ஏறமுடியாதே!!!!!!!!!!!
" ஊதுபவர்கள் ஊதுங்கள், விடியும் பொது விடியட்டும் "
எனகென்னவோ அந்த விடியல் வெகுதொலைவில் இல்லையென்றே தோன்றுகிறது