.

Pages

Friday, June 12, 2015

குழந்தைகளை தொழிலில் ஈடுபடுத்தும் நிர்வாகத்திற்கு ₹ 20 ஆயிரம் அபராதம், ஓராண்டு சிறை தண்டனை: மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை !

தஞ்சாவூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு சார்பில் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன், அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

பேரணியை தொடங்கி வைத்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:
குழந்தை தொழிலாளர் முறையினை அறவே அகற்றும் நோக்கத்தில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தினால் சட்டப்படி குற்றமாகும். மேலும் மாவட்டத்தில் உள்ள அனைத்து குழந்தைகளையும் பள்ளிக்கு அனுப்பி படிக்க வைப்பது பெற்றோர்களின் கடமையாகும். கல்விக்காக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார்கள்.  முழுகல்வி அறிவு பெற்ற மாவட்டமாக தஞ்சாவூர் மாவட்டம் திகழ வேண்டும் என்பதால் பெற்றோர்கள் மட்டுமல்லாது ஆசிரியர்கள், தன்னார்வலர்கள், எங்கேனும் குழந்தை தொழிலாளர்கள் இருப்பது தெரிய வந்தால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு வர கேட்டுக் கொள்கிறேன்.

குழந்தைகளை தொழிலில் ஈடுபடுத்தும் நிர்வாகத்திற்கு சட்டபடியான நடவடிக்கை மேற்கொண்டு ரூ.20 ஆயிரம் வரை அபராதத் தொகையும், ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும்.  குழந்தைகளுக்கு வரும் பிரச்சினைகளுக்கு சைல்டுலைன் இலவச தொலைபேசி எண் 1098 தகவல் தெரிவிக்க வேண்டும்.  குழந்தைகள் வளரும் பொழுது அவர்களுடைய ஆளுமைத் திறன் மற்றும் தலைமை பண்பை வளர்க்க வழிவகை செய்ய வேண்டும்.  குழந்தை திருமணம் நடந்தால் உடனடியாக சைல்டுலைனில் தெரிவிக்க வேண்டும்.  குழந்தை தொழிலாளர், கொத்தடிமை குழந்தைகள், பள்ளிச் செல்லாக் குழந்தை, பிச்சை எடுக்கும் குழந்தைகள், ஆதரவற்ற குழந்தைகள் எங்கு இருந்தாலும் உடனடியாக தகவல் கொடுக்க கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

பேரணி தஞ்சாவூர் ரயில் நிலையத்திலிருந்து காந்திஜி சாலை, கீழவீதி வழியாக தஞ்சாவூர் அரசர் மேல்நிலை பள்ளி வளாகம் சென்றடைந்தது. இப்பேரணியில் மேக்ஸ்வெல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அரசர் மேல் நிலைப்பள்ளி, கல்யாணசுந்தரம் மேல்நிலைப்பள்ளி, தூய அந்தோணியார் மேல்நிலைப்ள்ளி, தூய வளனார் மேல்நிலைப்பள்ளி, ஆக்ஸ்லீயம் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பிளேக் மேல்நிலைப்பள்ளி, வீரராகவ மேனிலைப்பள்ளி, ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தொடர்பான பதாகைகளை ஏந்திச் சென்றனர்.

தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் “இந்திய அரசியலமைப்பு விதிகளின்படி கல்வி பெறுவது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதால் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஒரு போதும் எந்தவித பணிகளிலும் ஈடுபடுத்த மாட்டேன் எனவும், அவர்கள் பள்ளிக்கு செல்வதை ஊக்குவிப்பேன் எனவும், குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலுமாக அகற்றிட சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என்றும், தமிழகத்தை குழந்தை தொழிலாளர் அற்ற மாநிலமாக மாற்றுவதற்கு என்னால் இயன்ற வரை பாடுபடுவேன் எனவும், உளமார உறுதி கூறுகிறேன்” குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான  உறுதிமொழியினை வாசிக்க மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்களும் உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.

பேரணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.கு.தர்மராஜன், முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. இரா. திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.ரெங்கநாதன், தொழிலாளர்கள் ஆய்வாளர் திரு.வெங்கடேசன்,  சைல்டுலைன் இயக்குநர் திரு.பாத்திமாராஜ் மற்றும் ஏராளமான மாணவ மாணவியர்கள் பங்கேற்றனர்.

 

1 comment:

  1. தியேட்டர் ,வெல்டிங், ஆட்டோ ஒர்க் ஷாப்களில் சிறுவர்கள் வேலை செய்வதை பார்க்கலாம் இதெர்க்கெல்லாம் காரணம் வறுமை, தந்தையர்கள் மதுக்கு அடிமையாகி தன் பிள்ளைகளை கொத்தடிமையாக்கி விடுகிறார்கள். இப்போ வெளிமாநிலத்த சிறுவர்கள் அதிகமாக வேலைப் பார்க்கிறார்கள், தடுத்து நிறுத்த நடவடிக்கை வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.