உலகின் முதல் மிதக்கும் தீவுகள் துபாயில் அமையவுள்ளது. இதனை ஒஜ்யானா மற்றும் அமில்லாராஹ் பிரைவேட் ஐலண்ட் ஆகிய இரு நிறுவனங்களும் சேர்ந்து 33 ஆடம்பர தீவுகளை உருவாக்க உள்ளனர். துபாய் நிறுவனமான நகீல் தற்பொழுது இந்த புதிய திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளதாக இந்த இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன. இந்த 33 ஆடம்பர தீவுகளும் தனித்தனியே நீச்சல் குளம், அழகிய தோட்டம், என பல சிறப்பம்சம் கொண்டதாகும்.
இது தொடர்பாக இதை உருவாக்க இருக்கும் நிறுவனங்கள் கூறுகையில்:
இந்த உலகத்தின் முதல் மிதக்கும் தீவுகளில் 33 தீவுகள் அமையவுள்ளன, இந்த தீவுகள் முழுக்க முழுக்க இதனை வாங்குபவர்களின் தேவைக்கேற்ப வடிவமைக்கபட உள்ளன எனவும், இன்னும் அனைத்து முக்கிய ஆவணங்களும் ஒப்புதல் பெறும் வரை தாங்கள் எந்தவிதமான விற்பனையையும் தொடங்கப்போவதில்லை எனவும் அமில்லாராஹ் பிரைவேட் ஐலண்ட் நிதின் முதன்மை செயல் அதிகாரி பால் வேன் டி கேம்ப் தெரிவித்தார்.
இந்த உலகின் முதல் மிதக்கும் தீவுகள் முழுக்க முழுக்க உலகத்தரம் வாய்ந்த கட்டிடக்கலை வல்லுனர்களால் கட்டப்பட உள்ளதாகவும். இந்த மிதக்கும் தீவுகள் ஒரே இடத்தில் ஆடாமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீவுகளின் அடிப்பாகம் நூறு வருடங்கள் ஆனாலும் எவ்வித பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் வகையில் உருவாக்கபட உள்ளன எனவும் இதனால் கடலுக்கு அடியில் வாழும் உயிரினங்களுக்கு ஒரு புதிய வாழ்விடம் அமையும் எனவும், இதே போன்ற மிதக்கும் தீவுகளை தங்கள் மாலத்தீவிலும், மியாமி தீவுகளிலும் உருவாக்க உள்ளதாகவும் இந்த நிறுவனத்தினர் தெரிவித்தனர்.
நன்றி: தினகரன்

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.