.

Pages

Friday, June 12, 2015

அதிரையில் WFC நடத்திய கால்பந்தாட்ட போட்டிகளில் அதிரை-பட்டுக்கோட்டை-அத்திவெட்டி அணிகள் வெற்றி !

அதிரை வெஸ்டர்ன் ஃபுட் பால் கிளப் [ WFC ] நடத்தும் 8 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் இன்று [ 12-06-2015 ] காலை மற்றும் மாலை நமதூர் மேலத்தெரு மருதநாயகம் மைதானத்தில் சிறப்பாக துவங்கியது.

மழையின் காரணமாக நேற்று ஆட்டம் நடைபெற வில்லை. இதையடுத்து இன்று மூன்று ஆட்டங்கள் நடைபெற்றது. முதல் ஆட்டம் இன்று காலை 8 மணியளவில் நடைபெற்றது. இதில் அதிரை WFC அணியினரும், அதிரை NFC அணியினரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-0 என்ற கணக்கில் கோல் அடித்து WFC அணியினர் வெற்றிபெற்றனர்.

இதைதொடர்ந்து இன்று மாலை இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் அதிரை SSM குல் முஹம்மது அணியினரும், பட்டுக்கோட்டை AVK அணியினரும் மோதினார்கள். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் 1-0 என்ற கணக்கில் கோல் அடித்து பட்டுக்கோட்டை AVK அணியினர் வெற்றிபெற்றனர். இதையடுத்து நடைபெற்ற ஆட்டத்தில் நாட்டுச்சாலை அணியினரும், அத்திவெட்டி அணியினரும் மோதினர். ஆட்ட இறுதியில் அத்திவெட்டி அணியினர் 4-0 என்ற கணக்கில் கோல் அடித்து வெற்றி பெற்றனர்.

நிகழ்ச்சிகள் அனைத்தையும் வழக்கம் போல் முஹம்மது யூசுப், அப்துல் வஹாப் தொகுத்து வழங்கினார். ஆட்ட அம்பயராக ஹாஜா நசுருதீன், லைன் அம்பயர்களாக சுலைமான், அப்ஸர் ஆகியோர் சிறப்பாக பணிபுரிந்தனர்.

இன்றைய ஆட்டங்களை காண ஏராளமான விளையாட்டுப் பிரியர்கள் மற்றும் பொதுமக்கள் மைதானத்திற்கு திரளாக வருகை தந்து ரசித்தனர்.

நாளை இரண்டு ஆட்டங்கள் நடைபெற இருக்கிறது. முதல் ஆட்டத்தில் KMC அதிரை அணியும், MFC மதுக்கூர் அணியினரும் ஆட இருக்கின்றனர். இரண்டாவது ஆட்டத்தில் KFC கரம்பயம் அணியும், நிஃபா 7's மதுக்கூர் அணியினரும் ஆட இருக்கின்றனர்.

நாளைய ஆட்டம் சரியாக மாலை 4 மணிக்கு துவங்கும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் சாதனை நிகழ்த்தும் சிறந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கு சிறப்பு பரிசுகளை பல்வேறு நிறுவனங்கள் வழங்க காத்திருக்கின்றன.

செய்தி மற்றும் படங்கள்:
கே. அப்துல் வஹாப் ( உஜாலா )

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.