.

Pages

Thursday, June 11, 2015

இசேவை மையங்களில் ₹ 40 கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறலாம்: மாவட்ட ஆட்சியர் தகவல் !

தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் 9 வட்டாட்சியர் அலுவலகங்களில் இசேவை மையங்கள் இயக்குகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்திருப்பதாவது: 
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டாட்சியர் அலுவலகங்களிலும் பொது இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இம்மையங்கள் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இதர அரசு விடுமுறை நாட்கள் தவிர பிற நாட்களில் காலை 9.45 மணி முதல் 5.45 மணி வரை செயல்படுகிறது.  பொது மக்கள் இம்மையங்களுக்கு நேரில் சென்று அரசின் சேவைகளை பெறலாம்.

இச்சேவை மையங்களில் வருமானச் சான்றிதழ், வகுப்புச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், கணவனால் கைவிடப்பட்ட பெண் என்பதற்கான சான்றிதழ், முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், முதலமைச்சரி பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம், திருமண நிதியுதவித் திட்டம் போன்றவைகளுக்கு பொது மக்கள் இச்சேவை மையங்கள் மூலம் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.

மேலும் ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கனவே விண்ணப்பம் செய்து, கருவிழி மற்றும் கைரேகைகளை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் பொது இ-சேவை மையங்களுக்குச் சென்று, ஒப்புகைச் சீட்டில் உள்ள 14 இலக்க பதிவு எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம். ஒப்புகைச் சீட்டு பதிவு எண்ணை பயன்படுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ரூ.40 கட்டணமாக வசூலிக்கப்படும்.  ஏற்கனவே ஆதார் எண் கிடைக்கப் பெற்றவர்கள் பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற விரும்பினால் ஆதார் எண்ணை தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெற்றுக் கொள்ளலாம்.  இதற்கு ரூ.30 கட்டணமாக வசூலிக்கப்படும்.  இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

1 comment:

  1. சேவை மையங்களில், நுகர்வோர் என்னென்ன சான்றிதழ்கள் கொண்டுவர வேண்டும் என்றும், எந்த சேவைக்கு என்ன கட்டணம் செலுத்த வேண்டும் என்றும், குறிப்பிட்ட கட்டணம் தவிர, வேறு கட்டணமோ, கூடுதல் சான்றிதழ்கள் வேண்டும் என்று வேண்டும் என்றே கேட்டால் ( பொருள், இத்துடன் வேலையாக வேண்டும் என்றால் கிம்பளம் ), யாரிடம் புகார் தெரிவிக்க வேண்டும் என்ற விவரங்கள் அடங்கிய அறிவிப்புக்களை நாற்புறமும், கொட்டை எழுத்துக்களில் எழுதி தொங்க விட, மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்க கூடிய, தாமே முன்னின்று அவர் அனுமதியுடன் செய்யக்கூடிய, நுகர்வோர் நலம் விரும்பிகள், சமூக ஆர்வலர்கள் யாருமுண்டோ ?,

    அப்படி ஏற்கனவே செய்திருந்தால், அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.