.

Pages

Saturday, June 13, 2015

தஞ்சையில் எஸ்டிபிஐ கட்சியினர் நடத்திய பேரணி - பொதுக்கூட்டத்தில் திரண்ட பொதுமக்கள் !

மத்திய அரசின் நிலக் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் நாடு முழுவதும் ஜூன் 1 முதல் 15-ம் தேதி வரை துண்டு பிரசுரம் வழங்குவது, போஸ்டர் ஒட்டுவது, தெருமுனைக் கூட்டங்கள் என பொதுமக்களிடம் பிரசாரம் செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

இதன்படி, இன்று 13-ஆம் தேதி தஞ்சாவூரில் நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை எதிர்த்து, எஸ்.டி.பி.ஐ. சார்பில் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயலாளர் ஜி. அப்துல் சத்தார் தலைமை வகித்தார். எஸ்டிபிஐ கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ், நாகை - திருவாரூர் - திருச்சி - பெரம்பலூர் - புதுக்கோட்டை - காரைக்கால் மாவட்ட தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். முன்னதாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. அபூபக்கர் சித்திக் வரவேற்புரை ஆற்றினார்.

முன்னதாக பேரணி தஞ்சை சிவகங்கை பூங்கா அருகே துவங்கி தஞ்சை இரயில் நிலையம் அருகே வந்தடைந்தது. பேரணியை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி துவக்கி வைத்தார்.

கூட்ட முடிவில் தஞ்சை வடக்கு மாவட்ட தலைவர் ஏ.முஹம்மது இப்ராஹீம் நன்றி கூறினார். இதில் ஏராளமான எஸ்டிபிஐ கட்சியினர் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். இதில் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.