.

Pages

Saturday, June 13, 2015

தொடர்ந்து புறக்கணிக்கும் அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து முற்றுகை போராட்டம்: மமக அறிவிப்பு !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 19 வது வார்டுகளின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சி அதிரை பேரூர் சார்பில் எதிர்வரும் [ 15-06-2015 ] அன்று மாலை 4 மணியளவில் அதிரை பேரூராட்சி அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மனிதநேய மக்கள் கட்சி அதிரை பேரூர் நிர்வாகிகள் கூறியதாவது:
'அதிரை பேரூராட்சியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட
மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த 17 மற்றும் 19 வது கவுன்சிலர்களின் வார்டுகளில் உள்ள அடிப்படை தேவைகளை தொடர்ந்து திட்டமிட்டு காழ்ப்புணர்ச்சியோடு புறக்கணிக்கும் அதிரை பேரூராட்சியின் ஒட்டுமொத்த நிர்வாகத்தின் சர்வாதிகார போக்கை கண்டித்து எதிர்வரும் 15-6-2015 அன்று மாலை 4 மணியளவில் நடைபெறும் மாமன்ற கூட்டத்தை மமக வின் இரண்டு கவுன்சிலர்களும் புறக்கணிக்கும் அதே வேளையில் அதிரை நகர மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அதிரை பேரூராட்சியின் காட்டு தர்பாரை கண்டித்தும் மமக கவுன்சிலர்களின் கோரிக்கையை நிறைவேற்றக்கோரியும், பேரூராட்சியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற உள்ளன. இதில் பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ள வேண்டும்' என்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.