.

Pages

Saturday, June 13, 2015

வாட்ஸ் அப்பில் பரவும் வதந்தியை நம்ப வேண்டாம் !

தமிழகத்தில் பள்ளிகள் தொடங்கும் நேரம் காலை 9.30 மணிக்கு பதிலாக 9 மணிக்கு தொடங்கும். வருகிற 24ந் தேதி முதல் இந்த புதிய கால அட்டவணை அமுலுக்கு வரும் என்று வாட்ஸ் அப்பில் இன்று தகவல் பரவியது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை செயலாளர் சபீதாவிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:–
வாட்ஸ் அப்பீல் பரவி வரும் தகவல் தவறானது. யாரோ விஷமத்தனமாக பரவி விட்டுள்ளார்கள். வகுப்பு நேரமும் 45 நிமிடத்தில் இருந்து 40 நிமிடமாக குறைக்கப்படுவதாக அந்த தகவல் கூறுகிறது. ஆனால் அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வழக்கம் போல் பள்ளிகள் தொடங்கும்.

இதுபற்றி அனைத்து மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கு விளக்கமாக சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: மாலை மலர்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.