.

Pages

Saturday, June 6, 2015

'கணினித்தமிழ் அறிஞர்' ஜமீல் அவர்களின் இல்லத் திருமண விழாவில் 'நபிமணியும், நகைச்சுவையும்' நூல் வெளியீடு !

பிரபல இணையதள ஆசிரியரும், இணையத்தோடு தொடர்புடையோர்களால் 'கணினித்தமிழ் அறிஞர்' என அன்புடன் அழைக்கப்படுபவருமாகிய முஹம்மது ஜமீல் ஸாலிஹ் அவர்களின் இல்லத்திருமணம் இன்று காலை பட்டுக்கோட்டை சாலையில் அமைந்துள்ள லாவண்யா திருமண மஹாலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முஹம்மது யூஸுப் அவர்கள் தலைமை வகித்தார். இதில் பொறியாளர் அப்துர் ரஹீம் மணமகனுக்கும், நயீமா மணமகளுக்கும் திருமணம் நடைபெற்றது. இதில் மவ்லவி அப்துல் ஹமீத் மண( குத்பா) உரை நிகழ்த்த, மணமகளின் தந்தை முஹம்மது இக்பால் ஸாலிஹ் வலீ வழங்கினார்.

நிகழ்ச்சியின் முன்னதாக அப்துல் பாசித் கிராத் வாசித்தார். நசுருதீன் ஸாலிஹ் வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், 'பிறை மேடை' ஆசிரியருமாகிய எம். அப்துர் ரஹ்மான், சமூக நீதி அறக்கட்டளை நிறுவனரும், 'சமூக நீதி முரசு' ஆசிரியருமாகிய சிஎம்என் சலீம், சென்னை காயிதே மில்லத் கல்லூரி பேராசிரியர் ஜே. ஹாஜா கனி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் 'கவிஞர்' சபீர் அஹமத் அபூ ஷாருக் அவர்கள் 'அதிரை நிருபர்' வலைத்தளம் குறித்து அறிமுக கவிதை வாசித்தார். இதை தொடர்ந்து 'எழுத்தறிஞர்' அதிரை அஹ்மத் அவர்கள் எழுதிய வாழ்த்து கவிதையை 'எழுத்தறிஞர்' இப்ராஹீம் அன்சாரி வாசித்து வாழ்த்துரை வழங்கினார்.

முன்னதாக பிரபல சமூக ஆர்வலரும், அதிரை நிருபர் வலைத்தளத்தில் 'நபிமணியும், நகைச்சுவையும்' என்ற தொடரை எழுதி பலரின் பாராட்டை பெற்றவருமாகிய முஹம்மது இக்பால் ஸாலிஹ் அவர்கள் எழுதிய ''நபிமணியும், நகைச்சுவையும்' என்ற நூல் வெளியிடப்பட்டது. அதிரை நிருபர் பதிப்பகத்தின் முதல் வெளியீடாக எழுத்தறிஞர்' இப்ராஹீம் அன்சாரி அவர்கள் எழுதிய 'மனு நீதி மனிதகுலத்திற்கு நீதியா ? என்ற நூல் வெளியிடப்பட்டது. இதைதொடர்ந்து இரண்டாவது வெளியீடாக இந்த நூல் வெளியிடப்படுகிறது.

இந்த நூலை 'எழுத்தறிஞர்' அதிரை அஹ்மத் வெளியிட, முதல் பிரதியை பிறை மேடை' ஆசிரியர் எம். அப்துர் ரஹ்மான், சமூக நீதி அறக்கட்டளை நிறுவனரும், 'சமூக நீதி முரசு' ஆசிரியருமாகிய சிஎம்என் சலீம், சென்னை காயிதே மில்லத் கல்லூரி பேராசிரியர் ஜே. ஹாஜா கனி ஆகியோர் பெற்றனர். இதன் பின்னர் விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் இந்த நூல் அன்பளிப்பு செய்யப்பட்டது.

விழா முடிவில் 'கணினித்தமிழ் அறிஞர்' முஹம்மது ஜமீல் ஸாலிஹ் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் உறவினர்கள், நண்பர்கள், இணையதள பங்களிப்பாளர்கள், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். லுஹர்த் தொழுகை மண்டபத்தின் முதல் மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட பெண்கள் உட்பட அனைவருக்கும் விருந்து உபசரிக்கப்பட்டது.


3 comments:

  1. இன்று திருமண விழாக் காணும் தம்பதியினருக்கு வல்ல நாயன் அல்லாஹ் எல்லா நலமும், வளமும் தந்து, ஒருவரை ஒருவர் நான்கு புரிந்து சிறந்த தம்பதியினாராய், எல்லா செல்வங்களும் பெற்று பல்லாண்டு வாழ துஆ வுடன் வாழ்த்துகிறேன்.
    بارك الله لكما و بارك عليكما و جمع بينمكا في خير

    அகத்திலும், புறத்திலும் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானக. உங்கள் இருவரையும் நல்லவற்றில் இனைத்து வைப்பானாக. ஆமீன்.

    ReplyDelete
  2. بارك الله لكما و بارك عليكما و جمع بينمكا في خير
    அகத்திலும், புறத்திலும் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானக. உங்கள் இருவரையும் நல்லவற்றில் இனைத்து வைப்பானாக. ஆமீன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.