தஞ்சாவூர் மாவட்ட அனைத்து அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்கள் மாதாந்திர திறனாய்வு கூட்டம் பட்டுக்கோட்டை இந்திய மருத்துவ சங்க அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் மீனாட்சி திறனாய்வு கூட்டத்திற்கு தலைமை வகித்தார். தமிழ்நாடு சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம்.எட்வின் முன்னிலை வகித்தார். மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி மோகன்ராஜ் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார்.
கூட்டத்தில் அனைத்து சுகாதார திட்டங்கள், 108 இலவச ஆம்புலன்ஸ் மருத்துவ சேவை, இலவச அமரர் ஊர்தி சேவை, தாய்-சேய் நல மகப்பேறு திட்டம், முதலமைச்சர் அவர்களின் விரிவான காப்பீட்டு திட்டம் மற்றும் மருத்துவ உபகரணங்கள், அனைத்து அரசு மருத்துவமனை
தரம் பற்றி ஆய்வு நடத்தப்பட்டது. சிறப்பான முறையில் பணிபுரியும் மருத்துவமனை டாக்டர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
பட்டுக்கோட்டை அரசு தலைமை மருத்துவர் பாஸ்கரன், பேராவூரணி அரசு தலைமை மருத்துவர் ஏ.காந்தி, ஒரத்தநாடு தலைமை மருத்துவர் வெற்றிச்செல்வம், அதிராம்பட்டினம் மகப்பேறு மருத்துவர் கவுசல்யா, பேராவூரணி செல்வி, டாக்டர் குணசீலன் மற்றும் கும்பகோணம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்த மருத்துவர்கள் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றனர்.
படம் ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்ற சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் மீனாட்சி. அருகில் சுகாதார திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எம். எட்வின் மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.