.

Pages

Thursday, June 4, 2015

பிரமாண்டமாய் காட்சியளிக்கும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் !

தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் கூடிய பெருந்திட்ட வளாகத்தினை சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள் திறந்து வைத்தார்.

புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கட்ட தஞ்சாவூர்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பிள்ளையார்பட்டி கிராமத்தில் 61.42 ஏக்கர் நிலம் இடம் தேர்வு செய்யப்பட்டு ரூ.30.50 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டது.

இப்பெருந்திட்ட வளாகம் தரை தளம் 68,561 சதுர பரப்பளவிலும், முதல்தளம் 49,674 சதுரடி பரப்பளவிலும், இரண்டாவது தளம் 43,249 சதுரடி பரப்பளவிலும், மூன்றாவது தளம் 41,201 சதுரடி பரப்பளவிலும் ஆக மொத்தம் 2 இலட்சத்து 2685 சதுரடி பரப்பளவில் 2 மின்தூக்கி வசதிகளுடன் விளங்குகிறது.

இந்த பெருந்திட்ட வளாகத்தில் 22 அரசுத்துறை அலுவலகங்கள் மற்றும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்ட அரங்கம், சிறிய கூட்ட அரங்கு, ஆய்வு கூட்ட அரங்கு உள்ளிட்ட வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

இக்கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட வருவாய் அலுவலர் அலுவலகம், மாவட்ட கருவூலம், மாவட்ட பிற்ப்படுத்தப்பட்டோர் நல அலுவலகம், மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலகம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மக்கள் தொடர்பு அலுவலகம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட தீயணைப்பு அலுவலர் அலுவலகம், மகளிர் திட்ட அலுவலகம், சுரங்கத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், நிலஅளவைத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், மாவட்ட வழங்கல் அலுவலகம், மாவட்ட சமூக நல அலுவலர் அலுவலகம், தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் அலுவலகம் உள்ளிட்ட தஞ்சாவூர் நகரில் பல இடங்களில் இயங்கி வந்த 22 அரசு அலுவலகங்கள் ஓரே கட்டிடத்தில் அமையுமாறு இக்கட்டிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முகப்பு நுழைவு வாயிலும், மற்ற அலுவலகங்களுக்கு எளிதாக செல்வதற்கு இக்கட்டிடத்தில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முகப்பு நுழைவாயிலும் மற்ற அலுவலகங்களுக்கு எளிதாக செல்வதற்கு மேலும் நான்கு நுழைவு வாயில்களும், ஓரே சமயத்தில் 13 நபர்கள் பயணிக்கக்கூடிய இரண்டு தானியங்கி மின் தூக்கிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தனியாக கூட்ட அரங்கம், திட்ட அலுவலர் அலுவலகத்திற்கு தனியாக கூட்ட அரங்கம், குறைதீர்க்கும் கூட்டத்திற்கு தனியாக கூட்ட அரங்கம் போன்றவை இக்கட்டிடத்தில் அமைக்கப்பெற்றுள்ளன.

சுமார் 110 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்க்கின்ற வகையில் புதிய மாவட்ட ஆட்சியரக பெருந்திட்ட வளாகத்தை வழங்கி சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததையடுத்து தஞ்சாவூர் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் நன்றி தெரிவித்தார்கள்.

தொடர்ந்து பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.  இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு.கு.பரசுராமன் (தஞ்சாவூர்), திரு.ஆர்.கே.பாரதிமோகன் (மயிலாடுதுறை), சட்ட மன்ற உறுப்பினர்கள் திரு.எம்.ரெங்கசாமி (தஞ்சாவூர்), திரு.எம்.ரெத்தினசாமி (திருவையாறு), திரு.இரா.துரைக்கண்ணு (பாபநாசம்), மாண்புமிகு மாநகர மேயர் திரு.சாவித்திரி கோபால், மாவட்ட ஊராட்சித்தலைவர் திருமதி.அமுதாராணி ரவிச்சந்திரன், மாவட்ட பால் கூட்டுறவு ஒன்றியத்தலைவர் திரு.ஆர்.காந்தி, மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் திரு.துரை.திருஞானம், ஒன்றியக்குழுத் தலைவர் திரு.லெட்சுமணன், மொத்த கூட்டுறவு பண்டக சாலைத் தலைவர் திரு.வி.பண்டரிநாதன், துணைத் தலைவர் திரு.வேங்கை கணேசன், நிலவள வங்கித் தலைவர் திரு.துரை.வீரணன், துணை மேயர் திரு.மணிகண்டன், மாவட்ட கூட்டுறவு ஒன்றியத் தலைவர் திரு.எஸ்.மோகன், திருவையாறு ஒன்றியக்குழு துணைத் தலைவர் திரு.இளங்கோவன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள்  திரு.குருசேவ், திரு.ராமன், திரு.குலோத்துங்கன், மாநகர மன்ற உறுப்பினர்கள் பிள்ளையார்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி.கௌசல்யா ஆனந்தன், ஒன்றியக்குழு உறுப்பினர் திருமதி.வசந்தா சைவராஜ், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பி.என்.ராமச்சந்திரன், பட்டுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திரு.ஜவஹர்பாபு, துணைத்தலைவர் திரு.வி.கே.டி.பாரதி, வல்லம் பேரூராட்சித் தலைவர் திரு.சிங் ஜெகதீசன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு.அசோகன், உதவி செயற்பொறியாளர் திரு.பாஸ்கரன், உதவி பொறியாளர் திரு.ஆர்.வெங்கடேசன் ஆகியோர் பங்கேற்றனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.