மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் என்.சுப்பையன் உத்தரவின் படி, மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் தட்சிணாமூர்த்தி அறிவுரையின் பேரில் வட்டார உணவுப்பாதுகாப்பு அலுவலர்கள் இரமா இராமநாதன் ( பேராவூரணி ), கோபாலகிருஷ்ணன் ( சேதுபாவாசத்திரம் ) ஆகியோர் கடைகள் மற்றும் பொருள் வைப்பறைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது கடைகளில் மேகி நூடுல்ஸ் விற்பனை செய்தால் சட்டப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்பட்டது. மொத்த விற்பனையாளர்களிடமும் மேகி நூடுல்ஸ் கொள்முதல் செய்யக்கூடாது என வலியுறுத்தப்பட்டது.
"மேகி நூடுல்ஸ் ரகங்களில் மோனோ சோடியம் குளுட்டமேட், அம்மோனியா போன்ற வேதிப்பொருள்கள் மேகி நூடுல்ஸில் அதிகமாக இருப்பது கண்டறியப் பட்டுள்ளது. இது குழந்தைகளுக்கும், பெரியோர்களுக்கும் உடல் தீங்கை உருவாக்கும். எனவே அரசால் தடை செய்யப்பட்டுள்ள நூடுல்ஸ் ரகங்களை யாரும் விற்பனை செய்யக்கூடாது" என விற்பனையாளர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேதுபாவாசத்திரம் ஒன்றியம் குருவிக்கரம்பை உள்ளிட்ட கிராம பகுதிகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதையெல்லாம் ஏற்கனவே செய்திருக்க வேண்டிய உணவு பாதுகாப்பு கழகங்கள் இப்போதுதான் விழித்தி கொண்டவை போல் எல்லாவற்றையும் சோதனை செய்கிறார்கள். இவ்வளவு நாள் என்ன செய்தார்கள்? அவர்களின் வேலையே இதுதானே. எதோ பிரச்சனை வந்தால் மட்டும் ஆக்டிங் கொடுத்து விட்டு மறுபடியும் பெஞ்சை தேய்க்க ஆரம்பித்து விடுகிறார்கள். இப்போதுள்ள நிறைய பாக்கெட் உணவுகளில் பிரச்னை இருக்கிறது. இவற்றை எல்லாம் தொடர்ச்சியாக சோதனை செய்து கண்காணிக்க வேண்டும்.
ReplyDeleteஉணவு பாதுகாப்புத் துறை தானாகவும், புகாரின்படியும், மாநிலம் முழுவதும், 20க்கும் மேற்பட்ட உணவுப் பொருட்களின் மாதிரிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த மாதிரிகள், பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. மறக்காமல் "அம்மா இட்லிக்கடை மாலை நேரத்தில் சாராயக்கடையின் அருகிலோ பாரிலோ ஆளுக்கட்சி ஆட்களின் ப்லகாரக்கடை,ஊறுகாய் விற்பனையையும் பரிசோதித்தால் நல்லது.
6 மாதம் கழித்து மீண்டும் இதெயே மக்கள் விரும்பி சாப்பிடுவார்கள் என்னத்த சொல்ல..
What about you
ReplyDelete