.

Pages

Tuesday, June 9, 2015

சென்னை மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக அதிரை ஷாகுல் ஹமீது பொறுப்பேற்பு !

அதிரையை சேர்ந்தவர் F. சாகுல் ஹமீது. இவர் சென்னை திருவல்லிக்கேணி காயிதே மில்லத் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள நவாப் சி. அப்துல் ஹக்கீம் மேல்நிலைப்பள்ளியில் பல ஆண்டுகளாக முதுகலை ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். இவரது பிறந்த ஊரான அதிரையில் பல்வேறு சமூக அமைப்புகளில் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி சமூக தொண்டாற்றி வந்துள்ளார்.  பல நூறு மாணவர்களுக்கு இலவசமாக சிறப்பு வகுப்பு நடத்தி வருகிறார். சிறுவயது முதல் மார்க்க பற்றுதலை பேணி நடக்கும் இவர் கல்வி பணியில் எந்நேரமும் மூழ்கி இருப்பவர்.

சமீபத்தில் கே.எஸ்.ஆர் குரூப் ஆஃப் இன்ஸ்ட்டியூஷன் சார்பில் தமிழகமெங்கும் பணிபுரியும் சாதனை நிகழ்த்திய தலைசிறந்த ஆசிரியர்களுக்கு 'நல்லாசிரியர்' விருது வழங்கி கெளரவிக்கும் விதமாக திருச்சங்கோட்டில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இந்திய தேசிய அறிவியல் அகாடமி தலைவர் ( INSA ) டாக்டர் ராகவேந்திரா கடாகர் அவர்கள் 'நல்லாசிரியர்' விருதை F. சாகுல் ஹமீது அவர்களுக்கு வழங்கி கெளரவித்தார்.

இந்நிலையில் இவர் நவாப் சி. அப்துல் ஹக்கீம் மேல்நிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இவருக்கு பள்ளி நிர்வாகம், சக ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

9 comments:

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.