முன்னதாக, தேமுதிக 124 தொகுதிகளிலும், ம.ந.கூட்டணி 110 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், தேமுதிக - மக்கள் நலக் கூட்டணியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி இணைந்துள்ளதால் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தன் முகநூல் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
தொகுதிப் பங்கீடு விவரம்:
தேமுதிக - 104 தொகுதிகள்
மதிமுக - 29 தொகுதிகள்
விடுதலை சிறுத்தைகள் கட்சி- 25 தொகுதிகள்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் - 25 தொகுதிகள்
இந்திய கம்யூனிஸ்ட் - 25 தொகுதிகள்
தமிழ் மாநில காங்கிரஸ் - 26 தொகுதிகள்
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்காக தேமுதிக 20 தொகுதிகளை விட்டுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நம் அரசியல் வாதிகள் சொத்து சேர்க்க அரசியலுக்கு வந்தார்கள் ஆனால் முப்பனார் குடுபம்மோ அவர்கள் சொத்தை பாதுகாக்க அரசியலுக்கு வந்த குடும்பம்.தமிழ் மக்களோ பிரபலத்தை பின் தொடர்பவர்கள் திசை மாறுகிறார்களா என்பதை தேர்தலில் பார்போம்.
ReplyDelete