.

Pages

Wednesday, June 12, 2013

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம் ! பிலால் நகர் மக்கள் மகிழ்ச்சி !

பிலால் நகரின் முக்கிய பகுதிகளில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாகவே மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பொதுநிதி ரூபாய் 16 இலட்சம் செலவில் 700 மீட்டர் தொலைவில் சாலைகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக செடியன் குளத்திலிருந்து ஈ.சி.ஆர் சாலை வரை உட்பட இந்தப்பகுதியில் உள்ள இதர சாலைகள் அனைத்தையும் மறுசீரமைத்து தரும்படி இந்தப்பகுதி சமூக ஆர்வலர்கள் அரசின் கவனத்திற்கு அவ்வப்போது எடுத்துச்செல்வது வழக்கம்.

இதன் தொடர்ச்சியாக இந்தப்பகுதியின் முக்கிய பகுதிகளில் புதிய தார்சாலைகள் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாகவே மும்முரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்பட இருப்பதால் இந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.




6 comments:

  1. அன்பு சகோதரர் நிஜாம் அவர்களின் குழந்தை பிறந்த அன்றே மூன்று வெற்றி செய்திகளை தாங்கி வந்திருக்கிறார் சமுக ஆர்வலரின் குழந்தை அல்லவா முதலில் அவரது பகுதியான பிலால்நகர் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தார் சாலை போடும் பணி தொடக்கம், .கனரா வங்கியின் துரித நடவடிக்கை, 10 வார்டு மக்களின் போராட்டம் வாபஸ் பேரூராட்சி உறுதி .மூன்றுமே வெற்றி செய்திகள் இன்ஷா அல்லாஹ் மென்மேலும் அவர் வளர வளர வெற்றி செய்திகளாக கொண்டு வந்து சேர்க்க வல்ல அல்லாஹுவிடம் துவா செய்வோம்மாக ஆமீன்

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.

    நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறும் பொது அதனால் அடையும் சந்தோஷத்தை எழுத்தில் எழுத முடியாது.

    இப்பணிக்காக முழு மூச்சாய் முயற்சி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    இப்படிக்கு.

    K.M.A. JAMAL MOHAMED. Consumer & Human Rights.
    த.பெ. மர்ஹும். கோ.மு.முஹம்மது அலியார்.
    உரிமையாளர், அதிரை13வாடி, வண்டிப்பேட்டை

    ReplyDelete
  3. இப்பணிக்காக முழு மூச்சாய் முயற்சி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    ReplyDelete

  4. இப்பணிக்காக முழு மூச்சாய் முயற்சி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    மகிழச்சியான செய்தி தான் போடக்கூடிய தார்சாலை நல்லபடியாக போடவும் மழைக்காலங்களில் ரோடு காணமல் போக பார்த்துக்கொள்ளவும்.

    ReplyDelete
  5. இப்பணிக்காக முழு மூச்சாய் முயற்சி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுக்கள்

    ReplyDelete
  6. இப்பணிக்காக முழு மூச்சாய் முயற்சி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

    மகிழச்சியான செய்தி தான் போடக்கூடிய தார்சாலை நல்லபடியாக போடவும் மழைக்காலங்களில் ரோடு காணமல் போக பார்த்துக்கொள்ளவும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.