.

Pages

Wednesday, October 29, 2014

10 பேர் அமரும் உலகின் நீளமான சைனா பைக் ! [ படங்கள் இணைப்பு ]

இது சைனா மேக்கா மச்சான்?’ என்று இதுவரை போன் மற்றும் எலெக்ட்ரானிக் ஐட்டங்களைத்தான் கேட்டு வந்தோம். இனிமேல், பைக்குகளையும் அப்படிக் கேட்கும் நிலை வந்துவிடும் போலிருக்கிறது.

நீங்கள் படத்தில் பார்க்கும் இந்த பைக், சத்தியமாய் சைனா மேக்தான். மத்திய சீனாவில், ஜெங்ஷூ என்னும் மாகாணத்தில், இந்த நீ...ளமான எலெக்ட்ரிக் பைக்கைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். 9 பேர் வரை அமரக்கூடிய இந்த பைக் 4.7 மீட்டர் நீளம்.

பெரிய ஸ்கூட்டர் கம்பெனியோ, பைக் கம்பெனியோ இதைத் தயாரிக்கவில்லை. ஒரு எலெக்ட்ரிக் பைக் கடை ஒன்றில், திடீரென்று இந்த பைக் நிறுத்தப்பட்டிருந்தது கண்டு, வாடிக்கையாளர்கள் குவிய ஆரம்பித்து விட்டார்களாம்.

இந்த பைக்கில் இரண்டு பேட்டரிகள் இருக்கின்றன. விடிய விடிய நீங்கள் இதை சார்ஜ் போட்டால் 60 கி.மீ வரை பைக்கை ஓட்டலாம். வழக்கம்போல், இதை ஓட்ட லைசென்ஸும் தேவையில்லை.

ஆனால், பால் பாக்கெட் வாங்க, மளிகைக் கடையில் பொருட்கள் வாங்கவெல்லாம் இதை எடுத்துச் செல்ல முடியாது. ஏனென்றால், இதை பார்க்கிங் பண்ணுவதற்கே சில ஏக்கர்களில் நிலம் தேவைப்படுமே!

கின்னஸ் ரெக்கார்டுக்காக இன்னும் கொஞ்சம் மெருகூட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது, இன்னும் பெயர் வைக்கப்படாத இந்த எலெக்ட்ரிக் பைக்!

- தமிழ்

Thanks : vikatan


No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.