முத்துப்பேட்டை பகுதியில் வனத்துறைக்கு சொந்தமான ஏராளமான தேக்கு மரங்கள் உள்ளது. இதனை அடிக்கடி திருட்டு கும்பல்ங்கள் வெட்டி கடத்தி வந்தனர். மேலும் வெட்டப்படும் தேக்கு மரங்களை அருகில் உள்ள குளங்களில் துண்டு துண்டாக வெட்டி போட்டு பிறகு அதனை கடத்தி வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் நாச்சிக்குளம் பகுதியில் தேக்கு மரங்களை வெட்டி கடத்தி வருவதாகவும், அதே பகுதியில் உள்ள ஒரு குளத்தில் வெட்டப்பட்ட தேக்கு மரங்களைப் பதுக்கி வைத்திருப்பாகவும் முத்துப்பேட்டை வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. அதனை அடுத்து வனத்துறை ரேஞ்சர் ராதாகிருஷ்ணன், பாரஸ்ட் அயூப் கான் ஆகியோரது தலைமையில் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட நாச்சிக்குளம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்பொழுது தேக்கு மரம் வெட்டி கடத்திக் கொண்டிருந்த கும்பல் தப்பிக்க முயற்சித்தனர். அப்பொழுது கடத்தல் கும்பலைச் சேர்ந்த மாதவன்(25), விஜயகுமார்(33), ராஜேந்திரன்(35) ஆகியோரை வனத்துறையினர் மடக்கிப்பிடித்தனர். இவர்கள் அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது. இதில் தப்பி ஓடிய முக்கிய குற்றவாளியான ரவி, ரமேஷ் உட்பட கும்பலை வனத்துறையினர் தேடி வருகின்றனர். இந்த நிலையில் கடத்தல் கும்பலிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள தேக்கு மரங்களை வனத்துறையினர் பறிமுதல் செய்யப்பட்டுள்ளனர்.
செய்தி மற்றும் படம் :
'நிருபர்' மொய்தீன் பிச்சை,
முத்துப்பேட்டை
செய்தி மற்றும் படம் :
'நிருபர்' மொய்தீன் பிச்சை,
முத்துப்பேட்டை
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.