ஜித்தாவில் குடும்பத்தோடு கலந்துகொள்ளக் கூடிய மார்க்க விளக்க நிகழ்ச்சியை ஜித்தா துறைமுக அழைப்பகம், லக்கி தர்பார் ரெஸ்டாரண்ட் வளாகத்தில் (ஷரஃபிய்யா) 24-10-2014 வெள்ளிக்கிழமையன்று ஏற்பாடு செய்திருந்தது.
அதில் மஃஹது உலூம் மதரஸா மாணவன் ஆர்.சுலைமான் (அதிரை) கிராத்ஓதி துவங்கிய இந்த நிகழ்ச்சியில், இஸ்லாமிக் இன்டர்நேஷனல் ஸ்கூல் (சென்னை) மாணவன் சிற்றுரையாற்றினார். அதையடுத்து மஃக்ரிப் தொழுகைக்குப் பிறகு மவ்லவி.சதக்கத்துல்லாஹ் உமரி அவர்கள் அழைப்புப் பணியின் நவீன சவால்கள் என்ற தலைப்பில் உரையாற்றி தஃவா களத்தின் நவீன சவால்களை எவ்வாறு ஆக்கப்பூர்வமாக எதிர்கொள்வது என்பதை அனுபவபூர்வமாக மக்களோடு பகிர்ந்துகொண்டார்.
அதனையடுத்து சகோதரர் கோவை.மசூது அவர்கள் கணவன், மனைவி, குழந்தைகள் அடங்கிய சிறந்த குடும்பம் எவ்வாறு அமைவது என்ற கருத்தை முன்வைத்து இஸ்லாமிய குடும்பம் என்ற தலைப்பில் உரையாற்றினார்.
அதன்பிறகு கலந்து கொண்டவர்களிடம் தலைப்பின் உரையை சார்ந்து கேள்விகள் எழுப்பப்பட்டு சரியாக பதிலுரைத்த சகோதர – சகோதரிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சகோதரர் ஷாஜகான் தலைமை தாங்கினார் நிகழ்ச்சியின் முடிவாக சகோதரர். நிஃயமதுல்லாஹ் முடிவுரை வழங்கினார். சகோதரர் அப்துல் காதர் ஒளிப்பதிவு செய்தார்.
பிறகு கலந்து கொண்ட அனைவருக்கும் இரவு உணவு பரிமாறப்பட்டது. இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைவதற்கு மிகவும் உறுதுணையாக இருந்த கந்தரா, ஷரஃபிய்யா, துறைமுகம் பகுதியைச் சார்ந்த சகோதரர்களுக்கும், இதில் கலந்துகொண்ட அணைத்து சகோதர சகோதரிகளுக்கும் அல்லாஹ் அருள்செயவானாக. (இருநூறுக்கும் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்).

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.