.

Pages

Friday, October 17, 2014

அதிரையில் தொடர் அடை மழை [ படங்கள் இணைப்பு ]

அதிரையில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது தொடர் மழை பெய்து வருகிறது. தளத்திலும் அவ்வப்போது செய்திகளை படங்களுடன் அதிரை நியூஸ் வாசகர்களுக்கு வழங்கி வந்தோம். இந்நிலையில் இன்று காலை முதல் தொடர் அடை மழை பெய்து வருகிறது. வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படுகின்றன. அவ்வப்போது இடியும் இடித்து வருகிறது. முக்கிய வீதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஆறு போல் ஓடுகிறது. இதனால் வீதிகளில் புழங்கும் மக்கள் நடமாட்டம் வெகுவாக குறைந்து காணப்படுகின்றது. வீட்டில் முடங்கி கிடக்கின்றனர். இன்று நாள் முழுவதும் மழை தொடர்ந்து பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து மழை படங்களாக கண்டு வந்த அதிரை நியூஸ் வாசகர்களுக்கு ஒரு மாறுதலுக்காக மழை காலங்களில் பெரும்பாலான வீடுகளில் தயாரித்து உண்ணும் மரவள்ளிகிழங்கு இனிப்பு அடை குறித்து செய்முறை விளக்கத்தை தற்போது நாம் பார்ப்போம்...

மரவள்ளிக்கிழங்கை தோல் சீவி விட்டு தண்ணீரில் போட்டு அலசிக் கொள்ளவும். பிறகு அதை கத்தியால் சிறு சிறுத் துண்டுகளாக சீவிக் கொள்ளவும், அல்லது காரட் துருவியால் துருவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அரிசியுடன் மூழ்கும் அளவு தண்ணீர் ஊற்றி 20 நிமிடம் ஊற வைக்கவும். முதலில் கிரைண்டரில் ஊற வைத்த அரிசியை கல் களைந்து விட்டு போடவும். பிறகு அரிசியை 5 நிமிடம் அரைக்கவும்.

பிறகு அதனுடன் துருவிய கிழங்கை போட்டு 10 நிமிடம் அரைக்கவும். கிழங்கு அரைப்படும்போது கைகளால் மாவை தள்ளி விட்டு கிழங்கில் உள்ள சக்கையை எடுத்து விடவும். அரிசி மற்றும் கிழங்கு நன்கு அரைப்பட்டவுடன் தேங்காய் துருவல், உப்பு, ஏலக்காய் போட்டு 2 நிமிடம் அரைத்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு கால் கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து வெல்லம் கரையும் வரை கரண்டியை வைத்து கலக்கிக் கொண்டே இருக்கவும். வெல்லம் கரைந்ததும் அதை அரைத்த மாவுடன் மேலாக ஊற்றி கிளறவும். வெல்லப் பாகை கலக்காமல் ஊற்றவும், அடியில் மண்படிந்திருக்கும். மாவுடன் வெல்லம் ஒன்றாக சேரும்படி நன்கு கலந்து தோசைமாவு பதத்தில் வைத்துக் கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து நெய் அல்லது எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து ஊற்றி மெலிதாக தேய்க்கவும். பிறகு மேலே எண்ணெய் அல்லது நெய் ஊற்றி 2 நிமிடம் கழித்து திருப்பி போட்டு வெந்ததும் எடுக்கவும். சுவையான மரவள்ளிகிழங்கு அடை தயார். இதை சூடாக சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும்.

நன்றி : அறுசுவை.காம்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.