.

Pages

Thursday, October 30, 2014

துபாயில் வினோதம் !

அளவுக்கு அதிகமாக உடல் குண்டாகி பல்வேறு அவதிக்குள்ளாவதை தவிர்க்கும் வகையில் உடல் பருமனை குறைப்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் துபாயில் அரசு ஒரு கிலோ குறைத்தால் 1 கிராம் தங்கம் என்ற திட்டத்தை மக்களுக்கு சென்ற வருடம் அறிமுகப்படுத்தியது. இவ்வருடம் 13 வயதுகுட்பட்ட குழந்தைக‌ளும், குடும்பத்தினர்களும் பங்கேற்கும் வகையில் அவர்களுக்கு இத்திட்டத்தில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் குறைந்த பட்சம் 2 கிலோ உடல் எடையை குறைக்க வேண்டும் என்ற அடிப்படையில் பரிசு  வழங்கப்படுகிறது. குழந்தைகள் ஒரு கிலோ குறைத்தால் 2 கிராம் தங்கம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இதில் இவ்வருடம் 15,000 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்றிருந்தனர். இதில் 7350 பேர் தங்கத்தை பெற தகுதி பெற்று உள்ளனர். இதில் 200க்கு மேற்பட்ட குழந்தைகளும் பரிசு பெற உள்ளனர். சுமார் 40 கிலோ வரை தங்கம் பரிசாக வழங்கப்பட உள்ளது. சென்ற வருடத்தை காட்டிலும் இவ்வருடம் கூடுதலானோர் பரிசு பெற உள்ளனர். இதற்கான பரிசளிப்பு விழா வரும் டிசம்பர் மாதம் நடைபெற இருக்கிறது.
Source : Khaleejtimes

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.