.

Pages

Thursday, October 30, 2014

சிஎம்பி லேன் - மிலாரிக்காடு - நடுவிக்காடு கிராம இணைப்பு சாலை ஆய்வு !

அதிரை பேரூராட்சியின் 21 வது வார்டு பகுதிக்கு உட்பட்ட சிஎம்பி லேன் பகுதியில் முறையான கழிவு நீர் வாய்க்கால் அமைக்கப்படாததால்.அந்த பகுதியின் வீடுகளில் புழங்கும் கழிவு நீர் அங்கு காணப்படும் சாலைகளிலும், அருகே உள்ள பொதுப்பணித்துறைக்கு சொந்தமான சிஎம்பி வாய்க்காலிலும் கலந்து விடுகிறது. இதனால் கழிவு நீர் தேங்கி துர் நாற்றம் வீசி சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது.

கடந்த சில நாட்களாக அதிரையில் பெய்த தொடர் மழையால் அப்பகுதியில் காணப்படும் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் வரும் அதிரை - மிலாரிக்காடு நடுவிக்காடு கிராம இணைப்பு சாலை பல ஆண்டுகளாக பராமரிக்கப்படாமல் பழுதடைந்து குண்டும் குழியுமாக காட்சி அளித்து வந்தது.

இந்த பகுதியில் வாழும் சமூக ஆர்வலர்கள் - பொதுமக்கள் பலர் பல்வேறு காலகட்டங்களில் சம்பந்தபட்டோரிடம் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர். கடந்த திங்கட்கிழமை கூட இந்த பகுதியில் வாழும் ஆர்வலர்கள் தஞ்சை சென்று மாவட்ட ஆட்சியரிடம் பழுதடைந்த சாலையை சீரமைத்து தர கோரிக்கை விடுத்தனர்.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியரின் ஆணைக்கிணங்க, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் சரோஜா மலைஅய்யன் அறிவுறுத்தலின் பேரில் சாலை ஆய்வாளர் ராஜேஷ் இன்று காலை மிலாரிக்காடு பகுதியிலிருந்து விகேஎம் ஸ்டோர் வழியாக வண்டிப்பேட்டை சிஎம்பி லேன் பகுதி வரை உள்ள சாலையின் நீளத்தை அளவீடு செய்தார். இதில் 1213 மீட்டர், சாலையின் நீளம் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைஅடுத்து அரசு பொறியாளரால் திட்ட மதிப்பீடு போடப்பட்டு, சாலை போடும் பணி விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றைய பணியை அதிமுகவின் தஞ்சை தெற்கு மாவட்ட சிறுபான்மை நல பிரிவு செயலாளர் அப்துல் அஜீஸ் உள்ளிட்ட அப்பகுதியினர் ஆர்வத்துடன் பார்வையிட்டு அலுவலருக்கு வேண்டிய உதவிகளை செய்தனர்.

களத்திலிருந்து நூவன்னா

3 comments:

  1. சமூக பணியிலும் கூட நின்றுகொண்டு இரண்டு விரல்களை காட்டி தன்னை யார் என்று அடையாளம் காட்டும் சகோதரர்களே....இது ஒன்றும் தேர்தல் காலம் அல்ல .... உங்களக்கு ஒன்னுக்கு ரெண்டுக்கு எல்லாம் வந்தால் அநேகம் அருகில் ஹனீப் பள்ளி மற்றும் இஜாபா பள்ளி இருக்கின்றது போய்வாருங்கள் .

    ReplyDelete
  2. சரியாக சொன்னீர்கள் காக்கா இந்த அளவு பார்பதற்கு ஒரு நபர் மட்டும் வந்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.நேற்றைய தினம் மாவட்ட ஆட்சியர் வந்து ஆய்வு செய்து விட்டு சென்றார்கள் இன்று மலை அய்யன் என்கின்ற நபர் அதிமுக பிரநிதியாக இருந்தாலும் அரசு சார்பில் தான் ஆய்வுகளை மேற்கொள்வார்கள்.ஆனால் இவர் ஒரு அளவு டேப்பை மட்டும் கொண்டு வந்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.இவளவு பெரிய ப்ரோட்ஜெட்க்கு ஒரு ஆளு மட்டும் வந்து இருக்குறாரு .யாரு குரூப் ல டூப்புண்டு தெரியல?

    ReplyDelete
    Replies
    1. அபூ சமிஹாவின் சித்தப்பூ அஸ்லம் அந்து டேப் புடிச்சு அளந்து ‎இருந்தால்!!??, இந்நேரம் இந்த அபூ சமிஹா ஆஹா ஓஹோ என்று ‎புகழ்திருப்பார்,........ ஆனால் டேப் புடிச்சது அஜீசா போயிட்டாரே அதான் ‎இப்படி எழுதுறாரு.‎

      அளக்கப்பட்டது எல்லாம் உண்மைதான். ‎

      Delete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.