.

Pages

Tuesday, October 28, 2014

தஞ்சை மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணம் ரூ. 25

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆட்டோ ரிக்சாவுக்கு குறைந்த பட்ச கட்டணமாக ரூ. 25 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் என். சுப்பையன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தமிழக அரசு ஆட்டோ ரிக்சாக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் அனுமதிச் சீட்டு பெற்று இயக்கப்படும் ஆட்டோ ரிக்சாக்களுக்கு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் குறைந்தபட்ச ஆட்டோ கட்டணமாக ரூ. 25 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் முதல் 1.8 கிமீ வரை மட்டுமே பொருந்தும். அடுத்த ஒவ்வொரு கிலோ மீட்டர் தூரத்துக்கும் ரூ. 12 கட்டணமாகும். அதேபோல, காத்திருப்பு கட்டணமாக 5 நிமிடத்திற்கு ரூ. 3.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவுநேர ஆட்டோ ரிக்சா கட்டணமாக இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை சாதாரண கட்டணத்துடன் அரைமடங்கு கூடுதல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்சாக்கள் மேற்கண்ட விதிப்படி ஆட்டோ கட்டணம் வசூலிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, அதிகக் கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

6 comments:

  1. அதிரையில் அதிகம் வசூல் மினிமம்
    ₹40

    ReplyDelete
  2. பதிவுக்கு நன்றி.‎
    தகவலுக்கும் நன்றி.‎

    இதை கேட்பதற்கும் படிப்பதற்கும் நல்லாதான் இருக்குது, ஆட்டோவில் ஏறி ‎பயணம் செய்ய பயமா இருக்கே.‎

    நம்ம ஊரில் உள்ள ஒவ்வொரு ஆட்டோ ஓட்டுனரையும் தனித்தனியாக ‎கூப்பிட்டு சொன்னாலும் நடைமுறையில் வருமா?‎
    ‎ ‎
    இப்படிக்கு.‎
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.‎
    த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.‎
    Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
    Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com‎

    ReplyDelete
  3. Asslamuallaikum,

    Jamal Bro , The Auto Driver has to follows the new rules. They are started charging RS 50 Fixed price even if it is HALF- ( 1/2) KM.

    If it go one like this middle class family what they will do.

    People have to ask questions now onwards they are not driving without profit even on Rs 25.

    Look the difference now they are charring on Rs 50 & Rs 25 !!!

    ReplyDelete
  4. எல்லோரும் ஒன்று கூடி அதற்கு முடிவு பண்ண வேண்டும். அப்படி அவர்கள் (ஆட்டோ ஓட்டுனர்கள்) அந்த விலைக்கு ஓட்ட மறுத்தால், பொது நல அமைப்புகள் ஆட்டோக்கள் வாங்கி விட வேண்டும். லாப நோக்கம் இல்லாத பொது அமைப்பு. அப்படி விடும் பட்சத்தில் அந்த அமைப்புக்கு வருமானமும் வரும் (குறைந்த லாபம்)

    ReplyDelete
  5. அரசு நிற்னைக்கும் கட்டணத்தை விட அதிகமாக மக்களிடம் பணத்தை கறப்பது வாடிக்கைதான், மீட்டர் வைத்து கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்று சொன்னாலும் மீட்டர் மேல போட்டு கொடுங்க என்று கேட்கிறார்கள் ஆனால் மீட்டரே இல்லாமல் அதிகமாக வசூலிப்பது என்ன நியாயம் ? இவங்க என்ன வரியா கட்டுறாங்க?

    குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் வருவதால் அதிகமாக மற்ற ஊர்களை விட ஆட்டோ இங்கே அதிகம் அதோடு மக்கள் பயன்பாடும் அதிகரித்து விட்டது , பெரியவர்களுக்கு ஆட்டோ சிறியவர்களுக்கு பைக் என்றாகி விட்டது இன்றைய நிலைமை.

    சேர் ஆட்டோ வந்தா நல்லது என தோன்றுகிறது - வருமா?

    ReplyDelete
  6. Well said Brother Nina, If the Driver's Keep on charging the same amount , The people have to think about it & some of the people already working to bring new auto’s like a call Taxi Style ( For Eg : Chennai Fast Track company).

    Auto Drivers have keep this on their mind to avoid such situations.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.