.

Pages

Wednesday, October 22, 2014

அதிரை நியூஸ் நடத்திய சிந்திக்க வைக்கும் சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி [ காணொளி ]

'சமூக சீர்கேட்டிற்கு காரணம் ?' 


தகவல் தொழில்நுட்பமா !?   மாறிவரும் கலாச்சாரமா !? 

என்ற இரு வேறு தலைப்புகளில் அதிரையின் பிரபல பட்டிமன்ற நகைச்சுவை பேச்சாளர்கள் இரு அணிகளாக இருந்து மோதும் சூடான விவாதங்கள். இதில் நடுவராக 'முத்தமிழ் நேசன்' கவிஞர் M.R. முத்து அவர்களும், தகவல் தொழில்நுட்ப சாதனங்கள்தான் சமூக சீர்கேட்டிற்கான காரணம் என வலியுறுத்தி T.V. பேச்சாளர் மதுக்கூர் இராமச்சந்திரன் இவரோடு இணைந்து 'நிருபர்' இல. சிவா M.A. ஆகியோர் ஓர் அணியிலும், இல்லையில்லை மாறிவரும் கலாச்சாராம்தான் சமூக சீர்கேட்டிற்கான காரணம் என வலியுறுத்தி 'நகைச்சுவை தென்றல்' அதிரை புஹாரி இவரோடு இணைந்து 'சிந்தனை பேச்சாளர்' கவிஞர் தியாக. புருஷோத்தமன் ஆகிய இருவரும் மற்றறொரு அணியாக இருந்துகொண்டு நம்மையெல்லாம் நகைச்சுவையூட்டி சிந்திக்க வைக்கின்றனர்.

வயிறுகுலுங்க சிரிக்க வைக்கின்ற இந்த சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சியின் காணொளியை அதிரை நியூஸ் வாசகர்களுக்கு அன்புடன் வழங்குவதில் பெருமிதம் கொள்கிறோம். 

இதோ அதன் காணொளி...









இது ஒரு மீள் பதிவு !

3 comments:

  1. சிறப்பு பட்டிமன்றத்திற்கு நன்றி

    அனைவருக்கும் தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. அதிரை நியூஸ் வலைதளம் மற்றும் அதுசார்ந்த சமூக விழிப்புணர்வு பக்கம் அடியேனால் உலக தமிழ் மக்கள் அனைவர்களுக்கும் எத்தி வைக்கபடுகின்றது மற்றும் சிபாரிசு செய்யவும் படுகின்றது...

    எனது சகோதரர் அதிரை புகாரி அவர்களின் பங்கேற்ப்பு பட்டிமன்றம் உலக தமிழ் மக்களை மிகவும் கவர்ந்துள்ளது காரணம் அதன் தலைப்பு மற்றும் அதன் பங்கேற்பாளர்கள் ....என்னுடைய காக்கா அதிரை புகாரி அவர்கள் என்னிடம் அடிக்கடி சொல்லும் ஒரு சிறந்த கருத்து ஊரில் உள்ள வாலிபர்கள் இவர்களிடம் நாம் சொல்லும் நல்ல உபதேசங்களே அதை அவர்கள் ஏற்கும் பட்சத்தில் சமூகம் சீர் அடையும் என்பதே .

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.