.

Pages

Thursday, October 23, 2014

அதிரை பேருந்து நிலைய பகுதியில் மழைநீர் தேங்கி நிற்பதால் பயணிகள் அவதி !

அதிரையில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் பேருந்து நிலைய பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் பேருந்து நிலைய சாலை குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இந்த குழிகளில் கழிவுநீர் தேங்கி நிற்பதால் பள்ளம் எது மேடு எது என்று தெரியாமல் பயணிகள் விழுந்து எழுந்து செல்கின்றனர். மாணவ மாணவிகளும், வாகன ஓட்டிகளும் மிகவும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

மழை நீர் தேங்கி காணப்படுவதால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எனவே பயணிகள் மற்றும் பொதுமக்கள் நலன்கருதி பேருந்து நிலையத்தில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றியும், பேருந்து நிலைய சாலையை சீரமைக்க பேரூராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.





4 comments:

  1. //அதிரை பேரூராட்சிக்கு.
    கடந்த சில நாட்களாக சேரும் குப்பை கூளங்கள் அப்புறப்படுத்தப்படாததால் குமிந்து ஆங்காங்கே சிதறி காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக அதிரையில் தொடர் மழையும் பெய்து வருவதால் தொற்று நோய் பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அஞ்சுகின்றனர்.//

    குப்பை கூளங்கள் ஊரு பூராவும் நிரம்பி வழிகின்றது.வீடிற்கு வீடு தோற்று நோய்களும் பரவி வருகின்றது ...அதிரை பேரூர் நிர்வாகம் உடன் சீர்செய்ய வேண்டுகிறேன்...இலையேல் உலகெங்கும் வெளிநாடு வாழ் அதிரையர்கள் ஊரின் நலன் கருதி போட்டி பஞ்சாயத்து நிறுவ இதுவே அடித்தளமாக இருக்கும் ...

    ReplyDelete
  2. மழையால் ஏற்பட்ட ரோடு சேதமா? எப்பவோ ஏற்பட்டது, பேருறாட்சின் அலட்சியபோக்கால் மக்கள் இப்போ அவதிப்படுகிறார்கள் . முதல்வர் வருகிறார் என்று சொல்லுங்கள் போர்கால அடிப்படயில் வேலை நடக்கும்,

    இவங்களுக்கு அரசு வேலை மட்டும் வேண்டும் ஆனா மக்களுக்கு செய்ய வேண்டியதை செய்ய மாட்டாங்க, மானங்கெட்ட புழப்பு.

    ReplyDelete
  3. சிறந்த நிர்வாகம் என்ற பேரெடுக்க இதுப் போன்ற சம்பவங்கள் பிரச்சனைகளைத் தீர்ப்பதில்தான் இருக்கிறது. நல்லது செய்ய நிர்வாகத்திற்கு வர, வந்த நபர்கள் செய்யலாமே.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.