பின்னர் விசாரணையில் முத்துப்பேட்டை அடுத்த கற்பகநாதர் குளம் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த திராவிட செல்வம் மகன் ஸ்டாலின்(22) என்று தெரிய வந்தது. மேலும் அவனிடம் கட்டுக்கட்டாக பணங்களும் இருந்ததைக் கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் முத்துப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரிடம் இளைஞன் ஸ்டாலினைப் பொதுமக்கள் ஒப்படைத்தனர்.
பின்னர் ஸ்டானிடம் நடத்திய விசாரணை பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் வங்கிகளில் அடகு வைக்கும் நகைகள் குறிப்பிட்ட காலங்களில் திருப்பப்படாமல் ஏலம் போகும் நகைகளுக்கு உரியவரிடம் நிதி உதவி கொடுத்து நகையைத் திருப்பி வேறு வங்கியில் கூடுதல் தொகைக்கு அடமானம் வைத்து லாபம் பார்க்கும் கும்பலிடம் தொடர்பில் இருந்ததாகவும், சம்மந்தப்பட்ட வங்கியின் சேர் மாhக்;கெட் பிரிவில் பணியாற்றுவதாகவும், முத்துப்பேட்டை பழைய போஸ்ட் ஆபிஸ் தெருவில் உள்ள ஒரு பிரபல தனியார் வங்கியின் அலுவலக ஊழியர்களிடம் நகையைத் திருப்பி தருவதாக கூறிப் பணங்களைப் பெற்றுள்ளதாகவும், அதற்காக நகைத் திருட முயற்சி செய்ததாகவும் தெரிகிறது. மேலும் ஸ்டாலின் பெயரில் அதே குறிப்பிட்ட வங்கியில் பல லட்சம் மதிப்புள்ள பல கிராம் எடைகள் கொண்ட நகைகள் அடமானம் உள்ளதாகவும் இந்த நகைகள் திருட்டு நகைகளாக இருக்குமோ? என்ற போலிசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மேலும் இளைஞன் ஸ்டாலினிடம் தொடர்ந்து நடந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வர துவங்கியதால் போலீசார் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர்.
கமிசனை கட்டவேண்டிய இடத்தில் குற்றவாலி கட்டுவதால் குற்றவாலி தண்டிக்கப் படுவதில்லை, மீண்டும் அதே தொழிலில் இருக்க காரணம் அரசு அதிகாரிகளே!
ReplyDeleteஎத்தனை வயது ஆள் என்று பார்க்கும் போது.நமது தாய் நாட்டின் நிலைமை இப்படி உள்ளதே என்று மனம் ரொம்பவும்
ReplyDeleteவேதனை படுகிறது.ஒரு குடூம்பதினை கவனிக்கும் வயது உள்ள நல்ல ஆண் மகனின் நிலைமை ., மனம் எண்ணில்லா .வேதனை படுகிறது.