.

Pages

Sunday, October 26, 2014

துபாயில் வாகனங்களை கண்காணிக்க நவீன பறக்கும் ரேடார் அறிமுகம் !

துபாயில் கண்காணிப்பு பணிக்காக பறக்கும் ரேடார்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. தற்போது கூடுதலாக நவீன மயக்கப்பட்டு முழு விடியோவாக துல்லியமாக படம் பிடிக்கும் வகையில் ஆளில்லா பறக்கும் ரேடார் அந்நாட்டின் தொழில்நுட்பத் துறை சார்பாக  அறிமுகப்படுத்தபட்டுள்ளது.

ரிமோட் கண்ட்ரோலால் இயக்கப்படும் இந்த ரேடார்  மூலம் சாலை விபத்துக்கள், தீ விபத்து, போக்குவரத்தை கண்காணிப்பது உள்ளிட்டவைகளை வீடியோவாக நேரடி காட்சியாக அறிய‌ முடியும் .  இதில் உள்ள கேமரா இரவிலும் துல்லியமாக செயல்படும் .நேரடியாக செல்லமுடியாத இடங்களுக்கு இந்த ஆளில்லா ரேடார் சென்று பல்வேறு பணிகளுக்கு உதவிகரமாக இருக்கும் எனவும் இது போன்று 7 பறக்கும் ரேடார் செயல்படும் என பாதுகாப்புக்கான ஊடகம் மற்றும் தொழில்நுட்ப விவகாரங்கள் துறை தலைமை அதிகாரி ஜமால் அல் ஹோஸனி தெரிவித்தார்.

Source : Emirates247

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.