யாரைக் குற்றஞ்சொல்வது !?
குப்பைகளை சாலையோரத்தில் ஏனோதானென்று கொட்டிவிட்டு செல்லும் பொதுமக்களின் குற்றம் என்கிறது ஒரு தரப்பு, இல்லையில்லை அதிரையின் பெரும்பாலன இடங்களில் குப்பை தொட்டிகளை வைக்காததும், சாலையோரத்தில் சிதறிக்கிடக்கும் குப்பைகளை கிளறிச்செல்லும் தெருக்களில் கேட்பாரற்று மேயும் மாடுகளை கட்டுபடுத்தாததும், குடியிருப்புகள் பெருகி வரும் நமதூரில் அதற்கு ஏற்றார் போல் போதுமான குப்பை அள்ளிச்செல்லும் வாகனங்கள் பேரூராட்சியிடம் இல்லாததும், ஊழியர்கள் பற்றாக்குறையும் குறிப்பிட்டு கூறுகின்றது மற்றொரு தரப்பு.
இதில் மற்றொரு விசயமும் கவனிக்கத்தக்கது, சரியான நேரத்தில் குப்பைகளை அப்புறப்படுத்தாமல் காலதாமதம் செய்யும் துப்புரவு பணியாளர்களும், அவ்வபோது இவர்கள் எடுத்துக்கொள்ளும் தொடர் விடுமுறைகளையும் குறை கூறுகின்றனர் பேரூராட்சியோடு நெருக்கமானவர்கள்.
குப்பைகள் அள்ளுவதில் தாமதமானால், பொதுமக்கள் முதலில் குறை கூறுவது, தங்களால் ஓட்டு போட்டு பேரூராட்சி அலுவலகத்தில் சேவையாற்ற அனுப்பி வைத்த மக்கள் பிரதிநிதிகளாகிய பேரூராட்சியின் வார்டு உறுப்பினர்கள் மற்றும் தலைவர், துணை தலைவர் ஆகியோரைத்தான் என்பதையும் மறுக்க இயலாது.
மாற்று வழி :
இதில் ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக்கொண்டு நமது ஊரை நாமே நாசப்படுத்திகொண்டு இருக்காமல் இதற்கு மாற்று வழியை யோசிப்பதே சிறந்தது என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. அதிரை பேரூராட்சி சார்பில் தற்போது பின்பற்றி வரும் குப்பை அள்ளிச்செல்லும் நடைமுறைகளை, சில மாதங்களுக்கு ஒத்தி வைத்துவிட்டு இதற்கு மாற்றாக சோதனை அடிப்படையில் மாற்று வழியை பின்பற்றினால் அந்தந்த பகுதிகளின் பிராதான சாலையோரத்தில் தேங்கி காணப்படும் குப்பை கூளங்கள் தேங்காமல் இருக்கும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக இருக்கிறது. இதற்காக அவர்கள் நம்மிடம் கூறும் ஆலோசனைகள் சற்று யோசிக்க வைக்கின்றன. இது குறித்து கூறும் போது 'கடந்த முறை பேரூர் மன்ற தலைவராக பொறுப்பு வகித்த காலஞ்சென்ற M.M.S. அப்துல் வஹாப் அவர்கள் சில காலங்கள் நடைமுறைபடுத்திய பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் 'வீடு தேடி வந்து குப்பை அள்ளிச்செல்லும்' திட்டத்தை நடைமுறை படுத்தினார். இதில் சில நடைமுறை சிக்கல்கள் இருந்த போதிலும் அதிரையின் பிரதான பகுதிகளில் தேங்கிய குப்பை கூளங்கள் கணிசமாக குறைந்து இருந்தது. இதனால் நகரும் சுத்தமாக காணப்பட்டது என்கின்றனர். மேலும் கூறும் போது, இந்த திட்டம் வெற்றிகரமாக் செயல்படுத்திட பொதுமக்கள் - துப்புரவு பணியாளர்கள் ஆகியோரின் ஒத்துழைப்பு அவசியம் என்பதையும் வலியுறுத்தி கூறுகின்றனர்.
நமது பேரூராட்சியை நாமே தரத்திலும், சேவையிலும் உயர்த்தி செல்ல சிறந்த ஆலோசனைகளை வாசகர்கள் இங்கே வழங்கலாம். இங்கே பதியும் அனைத்து கருத்துரைகளும் சம்பந்தப்பட்டவர்களின் பார்வைக்கு எடுத்துச்செல்லப்படும்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கும் நன்றி.
மாற்றுவழியை எல்லோரும் யோசிக்க வேண்டும்.
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. முஹம்மது அலியார்.
Human Rights & Consumer Rights Included, Thanjavur District Organizer
Adirampattinam-614701. Email:- consumer.and.humanrights614701@gmail.com
குப்பைகளை இங்கே கொட்டாதீர்கள் என்ற வாசகமே அதிகம் காணப்படுகின்றன மாறாக அதிரை பேரூர் நிர்வாகத்தால் குப்பைகளை இங்கே கொட்டுங்கள் என்ற வாசகத்துடன் அனைத்து வார்டுகளுக்கும் குப்பை தொட்டிகள் அமைத்து தரவேண்டுகின்றேன் .
ReplyDeleteஅவ்வாறு அமைக்கப்படும் குப்பை தொட்டிகள் சுமார் 4 அடி உயரத்தில் இருந்தால் மேலே குறிப்பிட்ட ஆடு மாடு நாய்கள் குப்பைகளை கிளற வாய்ப்பில்லை .
குப்பைகள் தினமும் அப்புறபடுத்த படவேண்டும் .வீட்டு வேலைக்கு ஆட்கள் வைத்திருக்கும் பணத்திமிர் வர்க்கங்கள் குறைந்த பட்சம் வேலை செய்யும் பனி பெண்களிடம் குப்பைகளை முறையாக போடவேண்டிய இடைத்தை சொல்லவேண்டும் .
மேலும் குப்பை தொட்டிகளும் சற்று விசாலமாக இருத்தல் வேண்டும் வீடுகளில் வெட்டப்படும் மரங்களை அங்கே போட அனுமதிக்க கூடாது.
இறைச்சிகளின் மற்றும் கோழி, மீன் போன்ற அசைவ கழிவுகளை பைகளில் நன்றாக கட்டி போடுவதால் துர்நாற்றம் தடுக்கப்படும் இவைகளுக்கு பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் .
ஆஸ்பத்தரி தெருவிற்கு என்று இதுவரை காலகாலமாக ஒரு குப்பதொட்டிகூட கிடையாது இதன் காரணம் தான் என்ன ?
இதன் குப்பைகளை வசதிபடைத்தோர் தான் வீடு சுத்தமாக இருக்க பிறர் வீட்டை குப்பை காடாக்கு கின்றனர் காரணம் பெண்கள் பள்ளி மாணவிகள் மற்றும் ஊரின் முக்கிய குறுக்கு பாதையாக மேலத்தெருவையும் பழன்செட்டி தெருவையும் கடைதெருவையும் இணைக்கும் இந்த குறுக்கு பாதையில் ஆஸ்பத்திரி தெரு குப்பைகள் கொட்டபடுகின்றன .
'கடந்த முறை பேரூர் மன்ற தலைவராக பொறுப்பு வகித்த காலஞ்சென்ற M.M.S. அப்துல் வஹாப் அவர்கள் சில காலங்கள் நடைமுறைபடுத்திய பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் 'வீடு தேடி வந்து குப்பை அள்ளிச்செல்லும்' திட்டத்தை நடைமுறை படுத்தினார். //
ReplyDeleteதிட்டங்களோடு இதனை மீண்டும் செயல்படுத்தினால் மிகவும் நால்லது. அனுபவப்பட்டவர்கள் முடிவுகள் சிறப்பானதாகத்தான் இருக்கும். எனவே மீண்டும் வீடு வீடாக குப்பைகளை சேகரித்து வெளியேற்றலாம்.