.

Pages

Saturday, June 13, 2015

அதிரையின் 8 ஊரணிகளுக்கு ₹ 43.50 லட்சம் மதிப்பில் நீர் நிரப்பும் பணி !

அதிரை பேரூராட்சி பகுதியில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பணிக்கான வேலைகள் துவங்கியது. அதிரை நசுவினி ஆறு ஓடையிலிருந்து சுமார் 1800 மீட்டர் நீளத்திற்கு குழாய் அமைத்து வறட்சி காலங்களில் 8 ஊரணிகளுக்கு நீர் நிரப்பும் பொருட்டு 20 எச்.பி. மோட்டார் அமைத்து நீர் இறைக்க திட்ட மதிப்பீடு தயார் செய்யப்பட்டது. அதிரை பேரூராட்சி பொது நிதியிலிருந்து  ₹ 43.50 லட்சம் மதிப்பில் திட்டம் தீட்டப்பட்டது. இதற்கான உத்தரவை தஞ்சை மாவட்ட ஆட்சியர் முனைவர் திரு. சுப்பையன் அவர்கள் பிறப்பித்ததை அடுத்து இதற்கான ஆரம்பகட்ட பணிகள் துவங்கியது.

இந்நிலையில் இந்த பணிகளுக்காக சம்பந்தப்பட்ட பகுதிகளில் பள்ளம் தோண்டி குழாய் புதைக்கும் பணிகள் நடைபெற இருக்கிறது. இதற்காக பிவிசி குழாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் தீவிரமாக களப்பணியாற்றி வருகிறார்.
 
 
 
அதிரை பேரூராட்சி தலைவர் மற்றும் அலுவலர்கள் இன்று மாலை மோட்டார் பம்பிங் அறையை நேரில் பார்வையிட்ட போது எடுத்த படங்கள்:

9 comments:

  1. மிக்க. நண்றி

    ReplyDelete
  2. கோடைக்காலங்களில் குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க திட்டங்கள் செயல்படுத்தப்படும் முன் அத்திட்டம் செவ்வனே செய்திட வேண்டும்; தமிழகத்தில் பல இடங்களில் தண்ணீர் வீணாக போய்கிறது காரணம் கல்நார் குழாய் அமைத்து தண்ணீரை நீர் தொட்டிக்கு எடுத்து செல்வதாலும் அதே நேரத்தில் அதிகாரிகளும் உடனடியாக சரிசெய்வதுமில்லை என்று மக்களிடம் குற்றச்சாட்டு உண்டு, இரும்புக் குழாய் விட PVC பைப் பாதுகாப்பானதுதான் ஆனால் அடிக்கடி உடைபடாமல் இருக்க தரமானவையாக இருக்க வேண்டும், நம்மவூரில் ஆடு சுவரை முட்டி சுவர் கீழே விழுந்தது எல்லோருக்கும் நினைவு இருக்கும்.

    தஞ்சை மாவட்டம் தமிழகத்தின் முதன்மை மாவட்டமாக விளங்க நல்ல திட்டங்களை மாவட்ட ஆட்சியர் முனைவர் திரு. சுப்பையன் அவர்கள் செய்துவருவதை பார்க்க முடிகிறது அதே போலும் நமது சேர்மன் அவர்களும் நமதூருக்கு கலப்பனியாற்றுவதில் சிறந்து விளங்குகிறார், மக்களின் சேவகனுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நல்லவை யாவும் துரிதமாக முடிவடைய கலப்பனியில் தீவிரம் காட்டும் அ பே தலைவருக்கு மனமார்ந்த நன்றி.

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. பதிவுக்கு நன்றி.

    அதிரை சேர்மன், தம்பி அஸ்லம் அவர்களால் விதைக்கப்பட்ட இந்த வித்து ஒரு வீரிய வித்து. துளிர் விட தொடங்கி விட்டது, இனிமேல் குளு குளுதான்.

    பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.

    இப்படிக்கு.
    கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
    த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.

    ReplyDelete
  6. அ பே தலைவருக்கு, பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  7. குறை கூறி திரிந்து கொண்டு இருக்கும் மனிதர்களுக்கு மத்தியில் ஊருக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற உங்களது ஆர்வத்தை பாராட்டுகிறேன். அல்லாஹ்வின் உதவி உங்களுக்கு எப்போதைக்கும் உங்களுக்கு கிடைக்கும்.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.