அதிரையில் கருணாநிதி பிறந்தநாள் விழாவையொட்டி திமுக கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இன்று திமுக தலைவர் கருணாநிதியின் 92 வது பிறந்தநாள் விழா நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிரையில் திமுக அலுவலகம் மற்றும் பேருந்து நிலையம் அருகில் திமுக கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அதிரை பேரூர் திமுக செயலாளர் இராம குணசேகரன், அதிரை பேரூராட்சித் தலைவர் எஸ்.ஹெச். அஸ்லம் மற்றும் அதிரை நகர திமுக முனோடிகள், முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மேலை நாடுகளில் நடப்பது போல; வட மாநில கலாச்சாரங்களை போல, அதிகாலை 4.30 மணிக்கு கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடுகிறார் கலைஞர் இது எந்த பகுத்தறிவு தலைவர் சொன்னது? எது எவ்வாறாக இருந்தாலும் தன் 92 வயதிலும் தளராத மன உறுதி, நல்ல ஞாபக சக்தி, உடனுக்குடன் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் திறன், நாட்டு நடப்பை அறிந்திருத்தல் ஆகியவை மிக அரிய தகுதிகளாகும். தலைவர் கலைஞர் அவர்களுக்கு என் மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
ReplyDelete