.

Pages

Wednesday, June 3, 2015

பள்ளிக்கரணையில் சேற்றில் சிக்கிய வாலிபர் உயிருடன் மீட்பு மீட்க முயன்ற தீயணைப்பு வீரரும் சிக்கியதால் பரபரப்பு


பள்ளிக்கரணையில் சதுப்பு நில சேற்றில் சிக்கிய வாலிபரை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். மீட்க முயன்ற தீயணைப்பு வீரரும் சேற்றில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

சேற்றில் சிக்கிய வாலிபர்
சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் இருந்து பல்லாவரம் செல்லும் 200 அடி ரேடியல் சாலையில் பள்ளிக்கரணை பகுதியில் சதுப்பு நிலம் உள்ளது. இந்த சேற்றில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் தலை மட்டும் தெரிந்த நிலையில் உயிருக்கு போராடிக்கொண்டு இருந்தார். இதனை அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு பள்ளிக்கரணை போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். தலை மட்டும் தெரிந்ததால் சேற்றில் சிக்கிய வாலிபரை காப்பாற்ற தீயணைப்பு துறையினருக்கு தகவல் தந்தனர். துரைப்பாக்கம் தீயணைப்பு அதிகாரி ரவிச்சந்திரன் தலைமையில் வீரர்கள் வந்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர் ராமலிங்கம் என்பவர் உடலில் கயிற்றை கட்டி சேற்றில் இறக்கி உயிருக்கு போராடிய வாலிபரை வெளியே எடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

ஒரு மணிநேரம் போராடி மீட்பு
ஆனால் சேற்றில் தீயணைப்பு வீரரும் மூழ்க முயன்றார். இருப்பினும் சுமார் ஒரு மணி நேரம் போராடி வாலிபரை உயிருடன் மீட்டு வெளியே கொண்டு வந்தார். நிர்வாண நிலையில் மயங்கியபடி கிடந்த வாலிபருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், அரசு பொது மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார்.

சேற்றில் சிக்கிய வாலிபர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர்? என தெரியவில்லை. இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் இணைந்து உயிருக்கு போராடியவரை மீட்டத்திற்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
நன்றி.

கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. (மர்ஹூம்) கோ.மு. முஹம்மது அலியார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.