முத்துப்பேட்டை அடுத்த எடையூர் அரசுப்பள்ளி கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து மாணவி படுகாயம். பயந்து வெளியேறிய தலைமை ஆசிரியை.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த எடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கடந்த 2011-2012 - ஆம் ஆண்டு ரூ.70 ஆயிரம் மதிபீட்டில் கழிப்பறை கட்டப்பட்டது. போதிய தரம் இல்லாமல் கட்டப்பட்டதால் சுவர்களில் விரிசல் ஏற்பட்டு ஆபாத்தான நிலையில் இருந்துள்ளது. இதனை பெற்றோர்கள் பள்ளி நிர்வாத்திடம் பல முறை புகார் தெரிவித்தனர். ஆனால் பள்ளி நிர்வாகம் இதனை கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் நேற்று மதியம் 2 மணிக்கு எடையூர் அடுத்த சோத்திரியம் கிராமத்தை சேந்த பாலசுந்தரத்தின் மகளான 8-ம் வகுப்பு மாணவி கமலி(13) மதியம் சாப்பாடு சாப்பிட்டு விட்டு கழிப்பறைக்கு சென்றுள்ளார். அப்பொழுது ஆபத்தான நிலையில் இருந்த கழிப்பறையின் ஒரு பக்க சுவர் திடீரென்று இடிந்து விழுந்தது.
இதில் மாணவி கமலிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் மாணவியை எடையூர் ஊராட்சி மன்ற தலைவர் குமரவேல் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். சம்பவம் நடந்ததும் பள்ளியின் தலைமை ஆசிரியை பிரேமாவதி பயந்து அவசர அவசரமாக பள்ளியைவிட்டு வெளியேறினார். இது குறித்து எடையூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இது குறித்து எடையூர் அரசு மேல்நிலைப்பள்ளி மேலாண்மை குழு தலைவர் நாகராஜன் கூறுகையில்: இந்த சம்பவத்திற்கு பள்ளியின் நிர்வாகமும் ஆசிரியைகளின் அலட்சியமும் தான் காரணம். பல முறை இது குறித்து பெற்றோர்கள் புகார் கூறியும் அலட்சியப்படுத்தி விட்டனர். இந்த சம்பவம் 3 முறையாகும். இதற்கு சம்மந்தப்பட்ட கல்வி துறை தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் மொய்தீன் பிச்சை
முத்துப்பேட்டை

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.