இதையடுத்து இந்தப் பணி தொடர்பாக கடந்த 08-04-2013 அன்று திருச்சியிலிருந்து வருகை தந்த குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள் அதிரையில் நேரடியாக ஆய்வுகளை மேற்கொண்டனர். இதைதொடர்ந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிகள் அதிரையில் துவங்கியது. பைப் குழாய்கள் லாரிகள் மூலம் அதிரைக்கு கொண்டு வரப்பட்டன.
இந்நிலையில் சிஎம்பி லேன் பகுதியிலிருந்து பள்ளம் தோண்டப்பட்டு அதில் குழாய்களை உடனுக்குடன் புதைக்கும் பணி இன்று காலை துவங்கியது. இந்த பணிகளுக்காக ஜேசிபி வாகனம் மற்றும் ஹிட்டாச்சி வாகனம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலத்தெருவில் அமைந்துள்ள நீர்தேக்க தொட்டி வரை பள்ளம் தோண்டப்பட்டு குழாய்கள் புதைக்கும் பணி நடைபெறும் என கூறப்படுகிறது. இந்த பணிகள் சில தினங்களுக்கு தொடர்ந்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteதிட்டம் தீட்டிவர்களுக்கு நன்றி.
திட்டத்தை முறைபடுத்திவர்களுக்கு நன்றி.
திட்டத்தை ஏற்றுக்கொண்டவர்கள் பொதுமக்களில் எத்தனை பேர்?
சி.எம்.பி. லைனை தவிர, மற்ற பொதுமக்கள் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு. முஹம்மது அலியார்.
சேர்மன்அஸ்லம்அவர்களுக்குநன்றி
ReplyDelete