அன்பார்ந்த அதிரை வாழ் இஸ்லாமிய பெருமக்களே இறைவனின் உதவிகொண்டு அதிரை நியூஸ் சார்பாக அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும், சிறந்த சாதனையாளர்களுக்கும் மற்றும் கல்வி ஊக்கத்தொகையும் அளித்து உங்களின் ஒத்துழைப்போடு சிறப்பாய் செயல்படுத்தினோம். இறைவன் நாடினால் இது ஒவ்வொரு வருடமும் தொடர வாழ்த்துங்கள்.
மேலும் அதிரையின் நலன்களில் மிகவும் அக்கறையோடு செயல்படுத்தக் கூடிய முக்கிய ஒரு விஷயத்தை உங்கள் ஒத்துழைப்போடு செயல்படுத்த சிறந்த ஆலோசனைகள் வரவேற்கப்படுகிறது.
குளிர், மழை, வெயில் பாராது , நிமிடங்கள் கூட தாமதிக்காமல், இறைவன் நியமித்த பணியில் கடமையாற்றிக்கொண்டிருக்கும் பள்ளி இமாம்கள், முஅத்தின்களுக்கு நிறைவான மாத சம்பளம் அளிக்கும் திட்டம்.
வாழ்வாதாரத்தைச் சம்பாதிக்க அஸ்பாப் எனும் உலகச் சாதனங்களைப் பயன்படுத்தாமலும், பிறரால் அறியப்பட்ட அதிக வெகுமதி தரும் சம்பாத்திய முறைகளில் ஈடுபடாமலும் வாழும் இவர்களுக்கு உதவ வேண்டியது நமது கடமை யல்லவா ? கடமையான தொழுகைகளை முன்னின்று நடத்தும் இமாமும் அவருக்குப் பின் நின்று தொழும் நூற்று /ஆயிரக்கணக்கான
மஅமூம்களில் முதன்மையானவரான முஅத்தினும் இறைவனின் பார்வையில் சிறந்தவர்களே.
சாதாரண ஆபீஸ் பாய் பணி செய்வோருக்குக்கூட தற்கால மாத ஊதியம் ரூபாய் 7000 முதல் 8000 வரை இருந்து வருகிறது. இதில் பாதியளவே இமாம்களுக்கும், முஅத்தின்களுக்கும் கொடுக்கப்படுகிறது. இதைக்கொண்டு அவர்கள் குடும்பத் தேவைகளை நிறைவு செய்ய முடியுமா ? அவர்களுக்கு சரியான சம்பளங்களை அளித்தால் வேறு பிதுஅத்தான விஷயங்களில் ஈடுபடாமல் அவர்களின் பர்லான பணியை மன சந்தோஷத்தோடு செய்வார்கள்.
அதிரையின் அனைத்து மஹல்லா கூட்டங்களில் இது பற்றி விவாதித்து, மஹல்லாவாரியாக அமைப்பு ஏற்படுத்தியோ அல்லது ஒட்டு மொத்தமாகவோ எல்லோருக்கும் ஒரே அளவில் சம்பளம் நியமித்து இவர்களின் ஊதியங்களை இக்காலத் தேவைகளின் அடிப்படையில் நிர்ணயம் செய்து, மற்ற ஊர்களுக்கு நாம் முன்னுதாரணமாக திகழ்வோம்! இது பெரும் தர்மங்களில் ஒன்றாகும்.
வஸ்ஸலாம்,
மு.செ.மு சபீர் அஹ்மது ( திருப்பூர் ) / அபூ தாஜ்
அவர்களுக்கு சரியான சம்பளங்களை அளித்தால் வேறு பிதுஅத்தான விஷயங்களில் ஈடுபடாமல் அவர்களின் பர்லான பணியை மன சந்தோஷத்தோடு செய்வார்கள்.
ReplyDeleteஅவசியமான பதிவு
ReplyDeleteமீக அவசியமான பதிவு ...
ReplyDeleteஇதற்கான தீர்வும் நண்பர் என்னிடம் கூறினார் .அத்தனையும் ஒரு பதிவாக அதிரை நியூசில் பதிந்து தீர்வு காணலாம்
காலச்சூழலுக்கேற்றவாறு சம்பளம் உயர்த்தி வழங்குவது அவசியம். பிலால் நகர் பள்ளி இமாம் மாத சம்பளமாக மிகவும் சொற்ப தொகை பெற்று வருகிறார். இவரைப் போல் பல்வேறு பள்ளிகளிலும் பலர் பணிபுரிந்து வருகின்றனர்.
ReplyDeleteஇவர்கள் மீது பள்ளி நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள், மஹல்லாவாசிகள் உள்ளிட்டோர் கவனம் செலுத்துவது அவசியம்.
பதிவுக்கு நன்றி.
ReplyDeleteஅருமையான, தேவையான பதிவு, ஆனால் வசதி படைத்தவர்கள் இந்தப் பதிவை அருமையானதாகவும், தேவையானதாகவும் பாவிக்க வேண்டும், அல்லாஹ் கொடுத்ததில் ஒரு சிறு பகுதியை இவர்களுக்கு வழங்கலாம்.
இந்த அதிரை ஒரு காலத்தில் கணக்கு பார்க்காமல் வாரி வாரி வழங்கி இருக்கின்றது.
அதே அதிரை இன்று போட்டா போட்டின்னு கணக்கு பார்க்காமல் வாரி வாரி விரையம் செய்கின்றது.
ஹலோ, அதிரையே திருந்த பாரு. திருத்தி வாரி வாரி வழங்கி வாழு.
இப்படிக்கு.
கோ.மு.அ. ஜமால் முஹம்மது.
த/பெ. மர்ஹூம். கோ. மு.. முஹம்மது அலியார்.