.

Pages

Wednesday, May 8, 2019

10 ஆம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற பிரிலியண்ட் CBSE பள்ளி மாணவர்கள்!

அதிராம்பட்டினம், மே 08
SSLC சிபிஎஸ்இ மத்திய அரசு பொதுத்தேர்வு திங்கட்கிழமை வெளியாகின. இதில், அதிராம்பட்டினம் அடுத்துள்ள புதுக்கோட்டை உள்ளூர் பிரிலியண்ட் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.

2018-2019 ஆம் கல்வியாண்டில் பள்ளி சார்பில், சிபிஎஸ்இ +2 வகுப்பு தேர்வு எழுதிய மொத்தம் 39 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில், 9 பேர் 90 சதவீதமும், 16 பேர் 80 சதவீதமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இதையடுத்து, பள்ளித் தாளாளர் வீ. சுப்பிரமணியன், பள்ளி முதல்வர் என். ரகுபதி, மேலாளர் எஸ். சுப்பையன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், பெற்றோர்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். பள்ளியில் தற்போது +1 புதிய சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.