.

Pages

Tuesday, May 14, 2019

அரசு மருத்துவமனையில் கட்டணம் இல்லா பிறப்பு சான்று வழங்கல்!

பேராவூரணி மே.14-
பேராவூரணி அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைக்கு கட்டணமில்லா பிறப்பு சான்று வழங்கப்பட்டது.

அரசு மருத்துவமனைகளில் நடைபெறும் பிறப்பு மற்றும் இறப்புகளுக்கு கட்டணமில்லா சான்றிதழ் தமிழக அரசின் உத்தரவின் பேரில் கடந்த ஓராண்டு காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பேராவூரணி அரசு மருத்துவமனையில் பிறந்த திருவிடைமருதூர் அருகே உள்ள ஆரலூர் பகுதியைச் சேர்ந்த கமல்ஹாசன்-சிநேகா தம்பதிகளின் பெண் குழந்தைக்கு செவ்வாய்க்கிழமை அன்று பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதனை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வந்திருந்த, சுகாதாரத் துறை இணை இயக்குநர் டாக்டர் அ.காந்தி குழந்தையின் தந்தையிடம் வழங்கினார். அப்போது முதன்மை குடிமை மருத்துவ அலுவலர் டாக்டர் பாஸ்கர் மற்றும் சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

அரசு மருத்துவமனைகளில், குழந்தை பிறந்து வீடு திரும்பும், ஓரிரு நாட்களில் குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் கட்டணமில்லாமல், பெற்றோர்களிடம் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.