தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலக கூட்டரங்கில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.அண்ணாதுரை தலைமையில் இன்று (30.05.2019) நடைபெற்றது.
ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்தில் வருகின்ற 08.06.2019 மற்றும் 09.06.2019 ஆகிய தேதிகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஆசிரியர் தகுதி தேர்வு நடைபெறவுள்ளது. 08.06.2019 அன்று நடைபெறவுள்ள முதல் தாள் தேர்வில் தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 6 தேர்வு மையங்களில் 2615 தேர்வர்களும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் 1860 தேர்வர்களும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 4 தேர்வு மையங்களில் 1526 தேர்வர்களும் தேர்வு எழுதவுள்ளனர்.
09.06.2019 அன்று நடைபெறவுள்ள இரண்டாம் தாள் தேர்வில் தஞ்சாவூர் கல்வி மாவட்டத்தில் 16 தேர்வு மையங்களில் 6641 தேர்வர்களும், கும்பகோணம் கல்வி மாவட்டத்தில் 13 தேர்வு மையங்களில் 5589 தேர்வர்களும், பட்டுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் 9 தேர்வு மையங்களில் 3786 தேர்வர்களும், ஒரத்தநாடு கல்வி மாவட்டத்தில் 2 தேர்வு மையங்களில் 629 தேர்வர்களும் தேர்வு எழுதவுள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு சிறப்பாக நடைபெறுவதற்கு தொடர்புடைய அலுவலர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணியினை திறம்பட மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.
ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முதன்மை கல்வி அலுவலர் சாந்தா மற்றும் பள்ளிக் கல்வித் துறை, வருவாய்த்துறை, காவல் துறை, மாவட்ட ஆய்வு குழு, போக்குவரத்துத் துறை, தீயணைப்புத் துறை, மின்சார வாரியம், ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் ஆகிய துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.