![]() |
அதிரை பாருக் |
17 வது நாடாளுமன்ற தேர்தலின் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு 19.05.2019 அன்று வட மாநிலங்களில் 59 தொகுதிகளுக்கு நடைபெறவுள்ளது. தமிழகத்தில் அரவக்குறிச்சி, சூலூர், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் ஆகிய நான்கு தொகுதிகளின் இடைத் தேர்தல்களும் இதே தேதியில் நடைபெற உள்ளது.
3 வது அணியெல்லாம் நிலையான ஆட்சியை கடந்த காலங்களில் அமைக்க
முடியாமல் இடையிலேயே கவிழ்ந்து மறு தேர்தல் நடந்தடெல்லாம் மக்களுக்கு தெரியும். காங்கிரசுக்கு அண்மையில் பெருகி வரும் ஆதரவை மறைக்கும் நோக்கத்தோடும், காங்கிரஸ் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்ற தவறான தகவல்கள் குறிப்பிட்ட சில மீடியாக்களில் ஓடிக் கொண்டிருக்கின்றன.
2004 ல் மன்மோகன் சிங் அவர்களின் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றும், இடது சாரிகள் 62 இடங்களில் வெற்றி பெறுவார்கள் எனவும், காங்கிரஸ் 220 இடங்களுக்கு மேல் வெற்றி பெரும் எனவும், இடது சாரிகள் வெளியில் இருந்து காங்கிரசுக்கு ஆதரவு தருவார்கள் எனவும் முன்கூட்டியே காங்கிரஸ் மேலிடத்திற்கு தெரியப் படுத்தினேன். அதுதான் நடந்தது. அடுத்து 2009 ல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி எனவும், மன்மோகன் சிங் அவர்களையே பிரதமராக தேர்ந்தெடுக்கலாம் எனவும் ஆலோசனை அனுப்பி இருந்தேன். இதை யாரும் அந்த நேரத்தில் எதிர்பார்க்கவில்லை. என்னுடைய
ஆலோசனைகளை அப்போதும் காங்கிரஸ் ஏற்றுக் கொண்டது. குடும்ப ஆட்சி, ஊழல் எனவும் உங்களுக்கெல்லாம் ஆட்சிக்கு வந்ததும் அதைத் தருகிறேன், இதைத் தருகிறேன் என்று கொஞ்சம் கூட பொருத்தம் இல்லாத, செயல் படுத்த முடியாத வாக்குறுதிகளை எல்லாம் அள்ளி வீசி விட்டு 2014 ல் மோடி அவர்கள் தலைமையில் ஆட்சி அமைந்தது. சொன்ன எதையுமே செயல்படுத்தவே இல்லை என்பது உலகறிந்த விஷயமாகி விட்டது. செய்த சாதனைகளை சொல்லி மக்களை சந்திக்காமல் போரையும், போரில் உயிர் நீத்த ஜவான்களையும் (War and War Related issues) முன்னிலை படுத்தி ஒரு கட்சி
அரசியல் செய்கிறது. இதற்கெல்லாம் தேர்தல் ஆணையம் தடை விதித்தும்
எந்த பலனும் இல்லை. ஒரு மகன் தன தாய்க்கு செய்த உதவிகளை ஊர்
முழுவதும் பறை சாற்றலாமா? கூடாது. அது போல் தன் தாய் நாட்டை காக்க
ஆளும் மத்திய அரசு மேற்கொள்ளும் வழக்கமான நடவடிக்கைகளை
அரசியலுக்காக பயன்படுத்துவது யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
தேசப்பற்று என்பது உங்களுக்கு மட்டும் தானா? எங்களுக்கெல்லாம் அது
இல்லையா என அவர்களது கூட்டணி கட்சியே (சிவசேனா) மோடி அவர்களிடம் வினா எழுப்பியது. இறந்த தலைவர்களை பற்றி தவறாக
விமர்சிப்பது மரியாதை இல்லை என்பது கூட தெரியாமல் மறைந்த பிரதமர்
ராஜீவ் காந்தி அவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதை யாரும் ஏற்றுக்
கொள்ள மாட்டார்கள். (21.05.2019 அவரது நினைவு நாள்). நான் உயிரோடு
இருப்பதற்கு ராஜீவ் காந்தியே காரணம் என மறைந்த வாஜ்பாய் அவர்கள் அப்போது பேட்டி அளித்தது தெரியாமல் ராஜீவ் அவர்களைப்பற்றி மேடையில் விமர்சித்து விட்டார்கள். ராஜீவ் அவர்கள் வாஜ்பாய் அவர்களை சிகிச்சைக்காக வெளிநாடு அனுப்பியதை இப்போதாவது அவரைப்பற்றி விமர்சித்தவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இதை நான் குறிப்பிடுகின்றேன்.
13.05.2019 அன்று தெலுங்கானா முதல்வர் சென்னை வந்து திரு. ஸ்டாலின்
அவர்களை சந்தித்தது மீடியாக்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகும் என்று அதே நாளில் பலரிடமும் கூறினேன். ஸ்டாலின் அவர்கள் தெலுங்கானா சென்று முதல்வர் திரு.கே.சந்திர சேகர ராவ் அவர்களை சந்தித்து காங்கிரஸ் தலைமைக்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும் என பேசியிருக்க வேண்டும். இது போன்ற விமர்சனம் தேவையற்றதாகியிருக்கும். தேர்தலுக்கு பிறகு பிரதமர் யார்? துணைப் பிரதமர் யார்? நிதியமைச்சர் யார்? என்பதெல்லாம் மீண்டும் குழப்பமான சூழ்நிலையை உருவாக்கிவிடும். ஒரு வேலை மூன்றாவது
அணியில் காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் தி.மு.க இணையும் பட்சத்தில்
எந்த வித பதவிகளையும் கேட்டுப் பெறாமல் 2004-ல் இடது சாரிகள்
காங்கிரசுக்கு ஆதரவு அளித்தது போல் வெளியிலிருந்து ஆதரவு அளிப்பது
தி.மு.க வின் தமிழக அரசியல் நகர்வுகளுக்கு பயனளிப்பதாக இருக்கும்.
காரணம் மூன்றாவது அணியால் மூன்று ஆண்டுகள் கூட நிலையாக
செயல்பட முடியாது. திரு. வி.பி.சிங், திரு சந்திரசேகர் ஆகியோரது கடந்த கால ஆட்சியே இதற்கு உதாரணங்கள். தவிர மத்தியில் நிலையான ஆட்சி அமையாது போனால் நாட்டில் மீண்டும் ஒரு பொருளாதார பின்னடைவு (ECONOMIC SETBACK ) ஏற்படும். அந்நிய முதலீடுகள் தடைபடும் (FOREIGN INVESTMENT). விலைவாசி உயரும், பணவீக்கம் (INFLATION) ஏற்படும் .
அகிலேஷ் அவர்கள் செல்வி. மாயாவதி அவர்கள் பிரதமருக்கு தகுதியானவர் என கூறுகிறார். அப்படியென்றால் 2022-ல் உத்திர பிரதேச சட்டமன்ற தேர்தலில் அகிலேஷ் தான் (சமாஜ்வாதி) முதல்வர் என மாயாவதி அவர்கள் கூறி விட்டாரா? அல்லது இனிமேல் தான் முடிவு செய்வாரா? உ.பி., தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா, போன்ற பல மாநிலங்களிலும் இனிமேல் மற்ற கட்சிகள் காங்கிரசுடன் இணைந்து தான் ஆட்சி அமைக்க முடியும்.
இந்த மாநிலங்களில் எல்லாம் இனிமேல் தனிக் கட்சி ஆட்சி உருவாக
வாய்ப்பில்லை. இதற்கான காரணங்களையெல்லாம் சில தினங்களில்
என்னுடைய செய்திகளில் பதிவிடுவேன். காங்கிரஸ் ஆட்சி அமைக்கும்
பட்சத்தில் கூட்டணியில் உள்ள சிறுபான்மை (Muslim), வேட்பாளர் ஒருவருக்கு
துணை பிரதமர், பொறுப்பு வழங்கும் சூழ்நிலை ஏற்படும்.
மேற்குவங்கம், உ.பி., மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய
மாநிலங்களிலிருந்து தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு இந்த பொறுப்பு கிடைக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. காங்கிரஸ் கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்காது. வரும் 23.05.2019 அன்று டெல்லியில் கூட உள்ள அவசர கூட்டத்தில் இது முடிவுக்கு வரும். தவிர, வரும் 19.05.2019 க்கு முன்பே இது பற்றிய முடிவை காங்கிரஸ் உடனடியாக அறிவிக்க வேண்டும். துணை முதல்வர், துணை பிரதமர் பதவிகளுக்கு தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. இது அந்தந்த கட்சிகளே முடிவு செய்து கொள்ளலாம். மூன்றாவது அணியை அமைக்க முட்டி மோதிக் கொண்டிருக்கும் கட்சிகளிடம் இதற்கெல்லாம் என்ன பதில் உள்ளது? இடது சாரிகளுக்கு 25 அல்லது 30 இடங்கள் கிடைத்தாலும் அதிமுக வுக்கு 4 அல்லது 5 இடங்கள் கிடைத்தாலும் (த.மா.கா, தே.மு.தி.க இதில் இல்லை). இவர்களும் காங்கிரஸ் கூட்டணிக்கே வெளியில் இருந்து ஆதரவு கொடுக்கும் சூழ்நிலை உருவாகும்.
மொத்தம் 10 எனும் தலைப்பில் அரசியல் தொடர்பான மேலும் பல
தகவல்களை இன்ஷா அல்லாஹ் சில தினங்களில் வெளியிட உள்ளேன். நன்றி!
ஏ. பாருக்,
'அரசியல் விமர்சகர்'
68 காலியார் தெரு,
அதிராம்பட்டினம் - 614 701.
பட்டுக்கோட்டை தாலுகா,
தஞ்சாவூர் மாவட்டம், தமிழ்நாடு.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.