அதிராம்பட்டினம், மே 30
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் பழுதடைந்த சாலையை புதிதாக அமைக்கவும், ரயில் நிலையம் குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவு நீர் ~ மழை நீரை அப்புறப்படுத்த முறையான வடிகால் வசதி அமைத்து தரக் கோரி, அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச்சங்கத் தலைவர் ஹாஜி எம்.எஸ் ஷிகாப்தீன் தலைமையில், செயலாளர் ஹாஜி ஏ.அப்துல் ரெஜாக், நிர்வாகிகள் முகமது இப்ராகிம், சேக்கனா நிஜாம், அகமது கபீர், ஏ. அப்துல் ஹாதி, தஸ்லீம் ஆரிப் உள்ளிட்டோர் அதிராம்பட்டினம் பேரூர் செயல் அலுவலர் எல்.ரமேஷ் அவர்களை அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை மாலை சந்தித்து மனு அளித்தனர்
இந்நிலையில், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் செல்லும் சாலை அமைக்க, அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலர் எல். ரமேஷ் மேற்பார்வையில், பேரூராட்சி பணி மேற்பார்வையாளர் (பொறியியல்) ராமலிங்கம் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் இன்று வியாழக்கிழமை அளவீடு செய்தனர். இதில், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை தொடங்கி ஹாஜா நகர், கடற்கரைத்தெரு வழியாக ரயில் நிலையம் வரையிலான 650 மீட்டர் நீளம் கணக்கிடப்பட்டது. பின்னர், அதிராம்பட்டினம் ரயில் நிலையம் குடியிருப்பு பகுதியில் தேங்கும் கழிவு நீர் ~ மழை நீரை அப்புறப்படுத்த வடிகால் வசதி அமைப்பதற்கான சாத்தியக்கூறு பற்றி ஆய்வைக் மேற்கொண்டனர்.
அப்போது, அதிராம்பட்டினம் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேசன், அதிராம்பட்டினம் ரயில் பயணிகள் நலச்சங்க செயலாளர் ஹாஜி ஏ.அப்துல் ரெஜாக், நிர்வாகிகள் சேக்கனா நிஜாம், தஸ்லீம் ஆரிப் ஆகியோர் உடன் இருந்தனர். அடுத்து ஓரிரு நாட்களில் சாலைப் பணிக்கான திட்ட மதிப்பீடு தயாரித்து உயர் அதிகாரியின் ஒப்புதலுக்கு அனுப்ப இருப்பதாக பேரூராட்சி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.