'மருத்துவ மாணவர்' எம்.எப் முஹம்மது ஹுசைன் |
சுத்தக் குறைவினால் ஏற்படும் கேடுகள் பற்றி எடுத்துரைக்கிறார் மருத்துவ மாணவர் அதிராம்பட்டினம் எம்.எப் முஹம்மது ஹுசைன்.
இதுகுறித்து கூறியது;
நம் அனைவருக்கும் ஒரு சந்தேகம் வரும், ஏன் மேற்கத்திய நாடுகளில் நோய் குறைவாகவும் இந்தியா, ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் நோய்கள் அதிகமாகவும் இருக்கிறது என்று? இவை அனைத்திற்கும் முக்கிய காரணம், நம் சுகாதார சீர்கேடு தான். கொசுக்கள் மிக குறைவாக உள்ள நாடுகளில் நோய்கள் குறைவாகவே இருக்கிறது. மலேரியா (Malaria), டெங்கு (Dengue), சிக்குன்குனியா(Chikungunya) போன்ற நோய்களெல்லாம் கொசுக்கடிகளாலயே வருகிறது.
மலேரியாவின் ஒரு பகுதியான (Plasmodium falciparum) உணர்விழந்த மயக்கநிலை (Coma) வரை கொண்டு செல்லும்.
இடுப்பு எலும்பு அல்லது இடுப்பு பகுதியில் ஏற்படும் காசநோய்(Pelvic TB), மலட்டுத்தன்மை வரை கொண்டு செல்கிறது. காச நோய் பரவுவதற்கான காரணம் எச்சிலை கண்ட இடங்களில் துப்புவதாலயே பரவுகிறது.
இயல்பாகவே சுற்றுச்சூழலில் நுண் கிருமிகள்(Microbes) இருக்கின்றன. நம் சுகாதார சீர்கேட்டால், அந்த நுண்கிருமிகள்(Microbes) நம் உடலில் சென்று எதிர்வினையாற்றுகின்றன. குறிப்பாக, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். ஆகையால் மிக எளிதில் நோய்த் தொற்று (Infection) ஏற்படுகிறது.
இவை அனைத்திற்கும் நம் சமூகத்தின் சுகாதாரமற்ற நிலை தான் காரணம். நம் ஊரின் சுத்தமற்ற நிலைக்கு அரசாங்கத்தை மட்டும் குறை கூறுவதை விட்டு விட்டு நாமும் நம் பங்கிற்கு நம் ஊரின் சுத்தத்தை சரியான முறையில் பராமரிக்க வேண்டும்.குப்பைகளையும், கழிவுகளையும் தேங்கவிடாமல் முறைப்படுத்துவதின் மூலமாகவும், வீணான தண்ணீரை எங்கேயும் தேங்கவிடாமலும், குடிநீரை நன்கு கொதிக்க வைத்து பயன்படுத்துவதன் மூலமாகவும், நம் ஊரை சுத்தப்படுத்துவதை கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம்.
நமது ஆரோக்கியம், நமது சுகாதாரத்தில்.
அருமையான பதிவு, கொசுவை நிரந்தரமாக ஒழிக்க கழிவை திறந்த வெளியில் கொட்டுவதை தவிர்க்க ரமலான் மாதத்தில் சபதம் ஏற்ப்போம்.
ReplyDelete