தஞ்சாவூர் மே.14-
செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியை அடுத்த செருவாவிடுதி தரம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற்றது.
வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் முகாமிற்கு தலைமை வகித்தார்.
மருத்துவ அலுவலர்கள் டாக்டர் ரஞ்சித், டாக்டர் ரிஸ்வானா பேகம், டாக்டர் அம்சவாணி, டாக்டர் கலைச்செல்வி ஆகியோர் கர்ப்பிணி பெண்களை பரிசோதனை செய்து, மருந்து, மாத்திரைகள், ஆலோசனைகள் வழங்கினர்.
முகாமில், கலந்து கொண்ட கர்ப்பிணி பெண்களுக்கு சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள காய்கறித் தோட்டத்தில், இரசாயன உரங்கள் இடாமல், இயற்கை உரங்களை பயன்படுத்தி, இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட தர்பூசணி பழங்கள் வழங்கப்பட்டது.
இதுகுறித்து வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் கூறியதாவது, "தற்போது கோடைக்காலமாக இருப்பதால், உடலில் நீர்ச்சத்து குறைவு ஏற்படும். இதனால் கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்த ஆண்டு இதனை கருத்தில் கொண்டு இயற்கை தோட்டத்தில் தர்பூசணி பழங்கள் விளைவிக்கப்பட்டது. சிறப்பான முறையில் ஏராளமான பழங்கள் விளைந்துள்ளது. இவற்றை கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கியுள்ளோம்" என்றார்.
முகாமில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகரன், கண் மருத்துவ நுட்பநர் திரவியம், மருந்தாளுநர் சரவணன், செவிலியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு தர்பூசணி பழம் வழங்கும் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதே ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வி.சௌந்தர்ராஜன் ஏற்பாட்டில் கர்ப்பிணி பெண்களுக்கு பசும்பால், நாட்டுக்கோழி முட்டை, வெல்லம் ஆகியவை ஏற்கனவே தொடர்ந்து வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.