.

Pages

Thursday, May 2, 2019

இமாம் ஷாஃபி மெட்ரிக். பள்ளியில் ஆங்கில மொழித் திறன் பயிற்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், மே 02
ஆசிரியர்களுக்கான ஆங்கில மொழித் திறன் பயிற்சி குறித்த பயிற்சி பட்டறை அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி மெட்ரிக். மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி இணைச் செயலர் ஹாஜி எம்.எஸ் சைஃபுதீன் தலைமை வகித்தார். பள்ளி துணைத்தாளாளர் எம்.எஸ் முகமது ஆஜம் வரவேற்றுப் பேசினார்.

சிறப்பு விருந்தினராக பேராசிரியர் எஸ்.பர்கத் கலந்துகொண்டு, ஆங்கில மொழித் திறனை எவ்வாறு வளர்த்துக் கொள்ளுதல், மாணவர்களுக்கு பயன்படும் வகையில் எளிமையாகவும், இனிமையாகவும் கற்பிப்பது குறித்து விளக்கிப் பேசினார்.

சிறப்பு விருந்தினராக ஆங்கில மொழி பயிற்றுநர் சென்னை நவாஸ் கலந்துகொண்டு, ஆங்கில மொழி கற்றல்-கற்பித்தல், மொழி உச்சரிப்பு, உரையாடல் மற்றும் பல்வேறு பயிற்சிகள் மூலம் விளக்கினார். பயிற்சி முடிவில் பள்ளி ஆசிரியர்கள் பள்ளியின் நோக்கம், குறிக்கோள், ஆங்கில மொழி உச்சரிப்பு, உரையாடல், ரிதம், கருத்துகள், பயிற்றுநர் மூலம் கற்றுக்கொண்ட அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
   
இதில், பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் எஸ்.எம்.கே நூர் முகமது, பள்ளி ஆசிரியர்கள், உலமா, ஆலிமாக்கள், அலுவலகப் பணியாளர்கள் உள்பட 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.