.

Pages

Sunday, May 12, 2019

பட்டுக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் சங்க கூட்டம்!

பட்டுக்கோட்டை மே.12-
அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பட்டுக்கோட்டையில் சனிக்கிழமை அன்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு, பட்டுக்கோட்டை ஒன்றியத் தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை ஒன்றியச் செயலாளர் ராவுத்தர், சேதுபாவாசத்திரம் ஒன்றியச் செயலாளர் ஜலில் முகைதீன், பேராவூரணி ஒன்றியத் தலைவர் சேவியர், பட்டுக்கோட்டை நகர தலைவர் ஆனந்த கிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தஞ்சை மாவட்டத் தலைவர் பஹாத் முகமது, மாவட்டத் துணைத்தலைவர் கே.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

மாற்றுத்திறனாளிகளின் உரிமை, சட்டம் பற்றி விளக்கமளிக்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு வழங்கும் சலுகைகள், அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து எடுத்துக் கூறப்பட்டது.
புதிய உறுப்பினர் சேர்க்கை, உறுப்பினர்கள் அட்டை வழங்குதல் மற்றும் கிளை அமைப்பு குறித்து ஆலோசிக்கப்பட்டது.

பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வரக்கூடிய மே 28 ஆம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கான கூட்டத்தில், உதவித் தொகை பெறுவதற்கான அரசாணை குறித்து முறையிடவும், உரிய நடவடிக்கை இல்லை எனில், அடுத்த கட்டமாக போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பேராவூரணி, பட்டுக்கோட்டை, சேதுபாவாசத்திரம், மதுக்கூர், அதிராம்பட்டினம் பகுதிகளில் இருந்து மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.