தஞ்சாவூர், மே 27
தஞ்சாவூர் மாவட்டம், 30.05.2019 முதல் 18.06.2019 வரை தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒன்பது வட்டங்களிலும் 1428-ஆம் பசலிக்கான ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளதாவது:-
தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட தஞ்சாவூர், பூதலூர், திருவையாறு, பாபநாசம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, ஒரத்தநாடு, கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய ஒன்பது வட்டங்களிலும் 30.05.2019 முதல் 1428-ஆம் பசலிக்கான ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
தஞ்சாவூர் வட்டத்தில் 30.05.2019 முதல் 07.06.2019 வரை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையிலும், பூதலூர் வட்டத்தில் 30.05.2019 முதல் 06.06.2019 வரை தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையிலும், திருவையாறு வட்டத்தில் 30.05.2019 முதல் 04.06.2019 வரை தஞ்சாவூர் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், பாபநாசம் வட்டத்தில் 30.05.2019 முதல் 11.06.2019 வரை கும்பகோணம் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், பட்டுக்கோட்டை வட்டத்தில் 30.05.2019 முதல் 18.06.2019 வரை பட்டுக்கோட்டை வருவாய் கோட்ட அலுவலர் தலைமையிலும், பேராவூரணி வட்டத்தில் 30.05.2019 முதல் 06.06.2019 வரை தனித்துணை ஆட்சியர் (முத்திரைக் கட்டணம்) தலைமையிலும், ஒரத்தநாடு வட்டத்தில் 30.05.2019 முதல் 13.06.2019 வரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தலைமையிலும், கும்பகோணம் வட்டத்தில் 30.05.2019 முதல் 07.06.2019 வரை தனித்துணை ஆட்சியர் (வருவாய் நீதிமன்றம்) தலைமையிலும், திருவிடைமருதூர் வட்டத்தில் 30.05.2019 முதல் 07.06.2019 வரை மாவட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலும் சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகள் நீங்கலாக தினசரி காலை 09.00 மணி முதல் நடைபெறவுள்ளது.
ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) நடைபெறும் நாட்களில் பட்டா மாறுதல், எல்லை பிரச்சனைகள், பொது மக்கள் வீட்டு மனை ஒப்படை, நில ஒப்படை, முதியோர் உதவித் தொகை ஆகிய கோரிக்கைகள் குறித்து சம்மந்தப்பட்ட வருவாய் தீர்வாய அலுவலரிடம் மனு அளித்து தீர்வு காணலாம். மேலும், ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) நிறைவு நாளன்று அனைத்து வட்டங்களிலும் வருவாய் தீர்வாய அலுவலர்கள் தலைமையில் விவசாயிகள் மற்றும் பொதுப்பணித்துறை (நீர் வள ஆதாரம்), வேளாண்மைத்துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சித் துறை, புள்ளியியல் துறை ஆகிய துறைகளின் உட்கோட்ட அலுவலர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில் பாசனம் தொடர்பான கருத்துருக்கள், முன்மொழிவுகள் மற்றும் கோரிக்கைகளை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். என இவ்வாறு தஞ்சாவூ மாவட்ட ஆட்சித் தலைவர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.