.

Pages

Monday, May 6, 2019

புனிதமிகு ரமலான் நோன்பையொட்டி அதிராம்பட்டினம் பள்ளிவாசல்களில் இரவுத்தொழுகை தொடக்கம்!

அதிராம்பட்டினம், மே 06
புனிதமிகு ரமலான் மாதம் தொடங்கியதையடுத்து, அதிராம்பட்டினத்தில்  அனைத்து பள்ளிவாசல்களில் தராவிஹ் தொழுகை இன்று திங்கட்கிழமை இரவு தொடங்கியது.

இஸ்லாமியர்களின் புனிதமிகு மாதம் ரமலான் முழுவதும் அதிகாலை சுபுஹ் தொழுகை தொடங்கி, மாலை மஹ்ரிப் தொழுகை வரை நோன்பு நோற்பதும், இரவில் தராவீஹ், வித்துரு சிறப்புத் தொழுகைகள், இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு, திக்ரு, ஹிஸ்பு மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெரும்.

அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் பெரிய ஜும்மா பள்ளிவாசல், மரைக்கா பள்ளிவாசல், தக்வாப் பள்ளிவாசல், செக்கடிப் பள்ளிவாசல், புதுமனைத்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல், கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளிவாசல், தரகர் தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல், ஏ.ஜே ஜும்மா பள்ளிவாசல், புதுப்பள்ளிவாசல், அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல், புதுத்தெரு மிஸ்கீன் சாகிப் பள்ளிவாசல், சி.எம்.பி லேன் இஜாபா பள்ளிவாசல், எஸ்.ஏ.எம் நகர் அல் மஸ்ஜிதுல் மப்ரூர்,  லதீஃப் பள்ளிவாசல், ஹனீப் பள்ளிவாசல், வாய்க்கால் தெரு மஸ்ஜிதே ரஹ்மானியா, சுரைக்கா கொல்லை கலிபா உமர் (ரலி) பள்ளிவாசல், மக்தூம் பள்ளிவாசல், வண்டிப்பேட்டை நூர் பள்ளிவாசல், நெசவுத்தெரு மஸ்ஜீது-ல்-ஹுதா, மேலத்தெரு அல் பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் பள்ளிவாசல், பிலால் (ரலி) பள்ளிவாசல், ஆதம் நகர் அர்ரஹ்மான் மஸ்ஜித் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் தராவிஹ் இரவுத்தொழுகை இன்று திங்கட்கிழமை இரவு 8.45 மணிக்கு தொடங்கியது.

மேலும், அதிராம்பட்டினம் ஈஸ்ட் கோஸ்ட் சாலை தவ்ஹீத் பள்ளிவாசல், சிஎம்பி லேன் மஸ்ஜித் தவ்பா பள்ளிவாசல், மேலத்தெரு சாணாவயல் மஸ்ஜித் அல் ஹிதாயா, அதிரை தாருத் தவ்ஹீத் அமைப்பின் சார்பில், பிலால் நகர் இஸ்லாமிய பயிற்சியகம் (பெண்கள் மட்டும்) ஆகியவற்றில் தராவிஹ் இரவுத்தொழுகை நடைபெற்றது.

இத்தொழுகைகளில் அந்தந்தப் பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் திரளாகக் கலந்துகொண்டனர். இந்த தொழுகை இன்று திங்கட்கிழமை இரவு தொடங்கி எதிர்வரும் ரமலான் பிறை 30 வரை தினமும் இரவு 8.45 மணிக்கு தொடர்ந்து நடைபெறும்.

பெண்கள் தொழுகைக்கு அந்ததந்தப் பகுதிகளில் உள்ள மஹல்லா சங்க வளாகங்களில் தனியாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில், பெண்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

மேலும், ரமலான் மாதம் முழுவதும் அதிராம்பட்டினம் பள்ளிவாசல்களில் மாலையில் நோன்பு கஞ்சி விநியோகம், ''இஃப்தார்' எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.