2019 ஆம் ஆண்டு புனித ரமலான் பண்டிகைக்கு நோன்பு கஞ்சி தயாரித்திட அதிராம்பட்டினத்தில் 29 பள்ளிவாசல்களுக்கு 44.35 டன் (44,350 கிலோ) பச்சரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதிராம்பட்டினத்தில் உள்ள 35 க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் புனிதமிகு ரமலான் மாதத்தில், மாலையில் நோன்பு கஞ்சி தயாரித்து பொதுமக்களுக்கும், நோன்பு கடைபிடிப்பவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
இதுகுறித்து கடந்த 14 ஆண்டுகளாக இப்பணிகளை மேற்கொண்டு வரும் பிலால் (ரலி) பள்ளிவாசல் முத்தவல்லி ஹாஜி எஸ்.எம்.ஏ அகமது கபீர் கூறியது;
புனிதமிகு ரமலான் மாதத்தில் அரசு வழங்கும் மானிய விலை பச்சரிசியை கிலோ ஒன்றுக்கு ரூ.1/- வீதம் செலுத்தி பெறுகிறோம். இவற்றை அரசு இலவசமாக வழங்க வேண்டும். அரிசியை ஏற்றி வரும் வாகனத்திற்கு வாடகை கட்டணத்தை அரசே செலுத்த வேண்டும். அரசின் சார்பில் அந்தந்த பள்ளிவாசல்களுக்கு நேரடியாக இலவசமாக விநியோகிக்க வேண்டும்.
கஞ்சி தயாரிக்க தேவைப்படும் ஆயில், பருப்பு வகைகள், சீனி, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்திவாசியப் பொருட்களை தமிழக அரசு இலவசமாக வழங்க வேண்டும். அதே போல் நாளுக்கு நாள் பெருகிவரும் மக்கள் தொகையைக் கருத்தில் கொண்டு கூடுதலாக அரிசியை வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் பட்டியலில் விடுபட்டுள்ள அனைத்து பள்ளிவாசல்களுக்கும் அரிசி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். காலதாமதத்தை தவிர்க்கும் விதத்தில் ரமலான் நோன்பு தொடங்கும் ஒருவாரம் முன்பாக அரிசியை விநியோகிக்க வேண்டும்' என்றார்.
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.