ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் எக்ஸ்போர்ட் ஆர்கனைஷேஷன், ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மையம் ஆகியவை இந்திய தூதரகம் மற்றும் கன்சுலேட் ஆதரவுடன் இரு நாட்கள் இந்த கண்காட்சியினை நடத்தின.
ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் எக்ஸ்போர்ட் ஆர்கனைஷேஷன் தென் பிராந்திய சேர்மன் வால்டர் டிசோசா, ஷார்ஜா இந்திய வர்த்தக மற்றும் கண்காட்சி மைய டைரக்டர் ஜென்ரல் ஸ்ரீபிரியா குமரியா, சன்னி ஹெல்த்கேர் குரூப் சேர்மன் டாக்டர் சன்னி குரியன், ஐடிஎல் காஸ்மாஸ் குரூப் சேர்மன் டாக்டர் ராம் புக்ஸானி ஆகியோர் முன்னிலையில் இந்திய தூதர் டி.பி. சீதாராம் கண்காட்சியினை திறந்து வைத்தார்.
டெக்ஸ்டைல், உணவு, பேப்பர் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 48 வர்த்தகர்கள் இந்தியாவிலிருந்து இக்கண்காட்சியில் பங்கேற்றனர். சென்னை, பாண்டிச்சேரியைச் சேர்ந்த வர்த்தகர்களும் இதில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
இந்திய தூதர் டி.பி. சீதாரம் அமீரகம் இந்தியப் பொருட்களின் மறு ஏற்றுமதிக்கு ஒரு முக்கியக் கேந்திரமாக திகழ்கிறது என்றார். வால்டர் டிசோசா தனது உரையில் இந்தியா அமீரகம் இடையேயான வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றார்.
நிகழ்வில் இந்திய வர்த்தக கன்சல் அனிதா நந்தினி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
செய்தி மற்றும் படங்கள் :
முதுவை ஹிதாயத்
நா ஆறாவது படிக்கும்போது எக்ஸ்போ 70ன்னு செய்கோ கை கடிகாரம் வந்தது, இப்போ எக்ஸ்போ 2014ன்னு வருதா, நல்ல முன்னேற்றம்.
ReplyDelete